எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?

motivation articles
motivation articlesImage credit - pixabay.com

ம்மில் பலர் ஒரு வேலையை செய்வதற்கு சோம்பேறித்தனப்பட்டு கொண்டு ஒத்தி போடுவோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு நாள் ஆகட்டும். என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வேலையை நாம் ஒத்திவைத்துக் கொண்டுதான் இருப்போம்.

பல சமயங்களில் நாம் ஒத்தி வைக்கப்படும் வேலைகள் நமக்கு பயன் இல்லாமல் போகும். அன்றே செய்திருக்கலாமே தவறு செய்து விட்டோமே என்று பின்னாலில் வருந்துவோம்.

நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம். நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, காரணமாக ஒத்திப் போடுகிறோம். வெற்றிபெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்.

சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்.

உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஓத்திப் போடுகிறோம். துக்கத்தின் காரணமாக ஓத்திப் போடுகிறோம்.

இப்படிப் பல காரணங்களைத்தேடி ஓத்திப் போடுகிறோம்..

ஒத்திப் போடுவதற்குக் காரணம் தேடும் நாம் நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா.

எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட எதாவது ஒரு முடிவை எடுக்கலாம். அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிளலாவது மகிழ்ச்சி அடையலாம்.

சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததற்கு இதுவா, அதுவா இப்படிச் செய்யலாமா அல்லது அப்படிச் செய்யலாமா என்ற குழப்பமே காரணம்.

ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம் முடிவெடுக்கும் தருணத்தில் யோசிப்பது நாம் செயல் படுவதைத் தள்ளிப்போட வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
நாம் எந்தக் கட்சி? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்!
motivation articles

எடுத்துக்காட்டாக உங்கள் வாகனம் சுத்தம் செய்தல், குளியல் அறை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் போடுதல் என்று நாளும் எதையாவது தள்ளிப் போட்டுக்கிட்டேதான் இருக்கிறோம்.

நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிப் போடுவதாகக் கூறிக் கொண்டாலும், அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்.

இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையைக் கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்;

ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள். நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பது இல்லை  என்பதல்ல. நம் சோம்பேறித்தனம்தான் காரணம்.

இனியாவது அன்றாட வேலைகளை ஒத்தி போடாமல் அவ்வப்போது செய்து வெற்றிக்கனியை பறிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com