Is ridicule from others hindering your success?
Is ridicule from others hindering your success?Image Credits: Freepik

அடுத்தவர் உங்களை ஏளனம் செய்வது உங்கள் வெற்றிக்கு தடையாக உள்ளதா?

Published on

ம் வாழ்வில் எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருப்போம். அப்போதெல்லாம் பாராட்டுவதற்கு மனமில்லாதவர்கள் கூட நாம் ஏதேனும் ஒரு சிறிய தவறை செய்யும்போது அதை சுட்டிக்காட்டி ஏளனம் செய்ய வந்துவிடுவார்கள். அடுத்தவர்கள் உங்களை ஏளனம் செய்வது உங்களுடைய வெற்றிக்கு தடையாக உள்ளதா? அப்படின்னா, இந்தக் கதை உங்களுக்கு தான். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, அந்த வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அதை போர்ட்டில் விவரமாக எழுதுகிறார்.  9*1= 9, 9*2=18, 9*3=27 என்று ஆரம்பித்து 9*10=91 என்று எழுதி முடிக்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவருமே விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். ஆசிரியர், ‘ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று மாணவர்களிடம் கேட்க, ‘நீங்கள் எழுதிய கடைசி கணக்கு தவறு’ என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.

அப்போது அந்த ஆசிரியர் கூறுவார், நீங்கள் சொன்னது போல நான் எழுதிய கடைசி கணக்கு தவறுதான். ஆனால், அதற்கு முன்னாடி ஒன்பது கணக்குகள் நான் சரியாக எழுதினேன். அதைப்பார்த்து யாருமே என்னை பாராட்டவில்லை. ஆனால், நான் கடைசி கணக்கில் செய்த ஒரு சின்ன தவறைப் பார்த்து இந்த மொத்த வகுப்புமே என்னை கிண்டல் செய்து சிரித்தீர்கள்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்கள் உங்களை நிராகரிப்பதற்காக வருத்தப்படுறீங்களா?
Is ridicule from others hindering your success?

இதுபோலத்தான் நம் வாழ்க்கையில் எத்தனை வெற்றிகள் பெற்றிருந்தாலும் நாம் செய்த ஒரு சிறு தவறைதான் இந்த உலகம் சுட்டிக்காட்டி ஏளனம் செய்யும். இதற்காக பயந்து நீங்கள் உழைக்காமல் இருந்துவிடக்கூடாது. ஏனெனில், Mistakes is a part of the process. ஒருத்தர் தப்பே செய்யக்கூடாது என்றால் அவர் எதுவுமே செய்யாமல் சும்மா தான் இருக்க வேண்டும் என்று கூறினாராம். அன்றைக்கு அந்த மாணவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை அந்த ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com