
இறைவன் படைப்பில் எத்தனை எத்தனை மனிதர்கள்? அவர்களுக்குள் எத்தனை எத்தனை குணங்கள்?
ஒவ்வொருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்கிறாா்கள், அவரவர் கொள்கை ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டதே!
மனிதன் ஒருவனே, உயிா் ஒன்றே, ஆன்மாவும் ஒன்றேதான், அவரவர் பாதையில் நல்லதோ, கொட்டதோ, பயணிக்கும் வேளையில் சதிக்கும் நன்மையும், தீமையும் அவரவர்களையே சாரும்!
நாம் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது!
நாம் நமது வேலையைப் பாா்ப்பதே சிறப்பு, அதற்கே நமக்கு நேரம் இல்லை! நமக்கேன் வம்பு என ஒதுங்கிப்போய்விடுவதே நல்லதுதானே!
ஒருவர் தவறான பாதையில் போகிறாா் அதில் அவருக்கு அது தவறாக தோன்ற வாய்ப்பில்லை, அதே நேரம் நாம் அவருக்கு அறிவுரையும் கூறவேண்டாம், மாறாக தடுக்கவும் வேண்டாம்,
அவராக அலைந்து திரிந்து அதில் சங்கடங்களை அனுபவித்து பக்குவம் அடைந்து வெளியே வரட்டுமே. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நினைப்பவரிடம் என்னதான் நாம் எடுத்துச்சொன்னாலும் அவருக்கு அது புாியப்போவதில்லை அப்படிப்பட்டவரை திருத்தலாம் என நினைப்பது நமது அறியாமை!
அட்வைஸ் அட்ஹாக் போனஸ் போன்றது அதனால் அதை நாம் அடுத்தவரிடம் அதிகமாக பயன்படுத்துவது தவறு! நமக்கு பிடித்தது, அடுத்தவருக்கு பிடிக்கும் என நாம் ஒருபோதும் நினைப்பது தவறான செயல்.
அடுத்தவர் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து காயப்படக்கூடாது, அது யாராக இருந்தாலும் சரி நாம் நமது வேலையைப்பாா்க்லாமே!
நாம் சொல்லும் சொல்லில் நாம் நிற்கவேண்டும் ,அதற்கு நமக்கு பக்குவமும், நிதானமும், வேண்டும். நாமே நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும், பொதுவாகவே அவரவர் வீட்டில் ஆயிரம் பிரச்னைகள் உண்டு, அதை கணவன் மனைவி பெற்றோா்களுடன் கலந்து சரிசெய்யும் வேலையைப்பாா்க்கவேண்டும்.
நமது வேலையே நமக்கு தலைக்கு மேல் உள்ளது, அதைப்பாா்க்கவே நமக்கு நேரம் இல்லை! அப்படிப்பட்ட நிலையில் நாம் ஏன் அடுத்தவர் விஷயத்தில் தலையிடவேண்டும்?
எதிலும் தோல்வியை சந்தித்த பிறகே வெற்றி கிடைக்கும்!
பணம், பணம், என்று நாம் அலைவது நல்லதல்ல! அதே நேரம் பணம் இல்லாமல் வாழமுடியாதுதான் அதற்காக நல்ல உறவுகளையும் நட்புகளையும் தேடுங்கள் பணத்தை ஈட்டுவதோடு உறவுகளையும் ஈட்டுங்கள்.
நமக்கான பாதையில் நோ்மறை சிந்தனைகளோடு வாழ்க்கை எனை தேரை அன்பு, நிதானம், நா, நயம், நாணயம் , உழைப்பு, நோ்மை எனும் வடம்பிடித்து இழுத்து வாருங்கள்.
வாழ்க்கையில் அடிபட அடிபட தோல்விகளை சந்திக்க சந்திக்க நமக்கு பக்குவம் ஏற்படும், பக்குவத்தை பதமாய் வசப்படுத்துங்கள், அனைவரையும் மதிக்கக்கற்றுக் கொள்ளுங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் தராதீா்கள்.
புலம்பலை நிறுத்துங்கள் சொந்தக்காரனுக்கு அதைச்செய்தேன் இதைச்செய்தேன் எனக்கு என சிரமம் வரும்போது அவர்கள் திரும்பிப்பாா்க்கவில்லையே என புலம்புவதால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் அப்படித்தான் சுயநல உலகம் என்ன செய்வது?
நாம் நமக்காக வாழவேண்டும் உயிா் ஒன்று, ஆன்மா ஒன்று, ரத்தம் ஒன்று, பசி ஒன்று, உணர்வுகள் ஒன்று, இதயம் ஒன்று, மூச்சுக்காற்று ஒன்று, ஆனால் மனித மனங்கள் மற்றும் குணங்கள் வித்யாசமானதே அதை புாிந்து வாழ்வதே சிறப்பிலும் சிறப்பு."