ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதே சரி!

It's okay to think creatively!
Motivation articlesImage credit - pixabay
Published on

லகம் நம் முயற்சியை கவனிக்காது முடிவுகளைத்தான் கவனிக்கும். எனவே சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியம். எந்த ஒரு செயலுக்கும் நன்மை, தீமை என்ற பின் விளைவுகள் உண்டு. அதனால் எப்பொழுதும் சிந்தித்து செயலாற்றுங்கள். 

ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்கு சிந்திக்க வேண்டும். சிந்திக்காமல் அவசர அவசரமாக செய்துவிட்டு பின் அதை நினைத்து வருந்தக் கூடாது. எந்த ஒரு காரியத்திலும் நிதானத்தோடு  செயல்பட்டால் வாழ்வு செழிக்கும். தொல்லைகள் வராது. மனதிற்கு, தெளிவாக எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்ற புரிதல் அவசியம் தேவை. சரியான புரிதல் இருந்தால் புற உலக வாழ்வின் இன்ப துன்பங்கள் நம்மை சிறிதும் பாதிக்காது.

சிந்தித்து செயலாற்ற எந்த விஷயத்திலும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடித்தாலே போதும். பல சிக்கல்களையும் ஆராய்ந்து எது சரி, எது தவறு என்று தீர்வு கண்டுவிடலாம். உதாரணத்திற்கு ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதைப்பற்றி நினைப்பது, ஆரம்பிப்பது, முடிப்பது என்ற மூன்று நிலைகள் உள்ளன. நினைப்பது ஒன்றும், சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருந்தால் சரி வராது அல்லவா. நினைத்ததை நன்கு சிந்தித்து செயலாற்றத் தொடங்கினால் அந்த வேலை சுணக்கமின்றி நன்றாக சுலபமாக முடியும்.

சில சமயம் சில காரியங்களில் சிந்திக்க நேரம் இருக்காது. அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதிக சிந்தனையால் காரியம் கெட்டுவிடும் என்ற நிலையில் அந்த சமயத்திற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் நிகழ்ந்து விடாது!

எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் திறன் நம் சிந்தனை சக்திக்கு உண்டு. சிந்தித்து செயலாற்றுவதன் மூலம் நம் எண்ணங்களை கட்டுப்படுத்துவதும், செயல்களை நல்வழிப்படுத்துவதும் சுலபமாகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் மதிப்பை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள்!
It's okay to think creatively!

ஒரு செயலை செய்வதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்பது சரிதான். எல்லோரும் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த சிந்தனை பல காரணங்களால் மாறுபடுகிறது. ஆசை, கோபம், அன்பு, பொறாமை போன்றவை நம் சிந்தனையை தடம் புரளச் செய்கின்றன. இதனால் எடுக்கும் முடிவு சரிதான் என்று மனம் எண்ணுகிறது. ஆனால் விளைவுகள் மோசமாகும்போது அப்படி செய்திருக்க கூடாதோ, இப்படி செய்திருக்கக் கூடாதோ என்று மனம் வருந்துகிறது. எனவே ஒன்றை செயலாற்றுவதற்கு முன்  சுயநலமின்றி, பாரபட்சமின்றி நடுநிலையில் நின்று சிந்திக்கப் பழக வேண்டும்.

சிந்திக்காமல் செயல்படுவது எவ்வளவு ஆபத்தானதோ அதேபோல் தான் சிந்தித்துக் கொண்டேயிருந்து எந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளிலும் இறங்காதிருப்பதும். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பதால் எந்தவொரு பலனும் இல்லை. சிந்தனையின் முடிவில் ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய வேண்டியது அவசியம்.

தெளிவாக சிந்திக்காததால்தான் பல பிரச்னைகள் உருவாகின்றன. அடுத்தவர் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பாமல் நம் அறிவு கொண்டு சிந்தித்து செயல்படுவதே சரி!

என்ன நான் சொல்வது சரிதானே! சரி என்றால் "ஓ" போடுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com