வாழ்க்கைப்பற்றி கண்ணதாசன் கூறிய 15 அனுபவ மொழிகள்!

Kannadasan
Kannadasan

கவிஞரும் பாடலாசிரியருமான கண்ணதாசன் தனது வாழ்க்கையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார். வாழ்க்கைபற்றியும், மரணத்தைப் பற்றியும் சரி சமமாக எழுதி படிப்பவர்களுக்கு ஒரு புரிதலைக் கொடுப்பவர் கண்ணதாசன்.

அந்தவகையில் வாழ்க்கை பற்றி கண்ணதாசன் கூறிய சில தத்துவங்களைப் பார்ப்போம்.

1.  யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டும்.

2.  உன் வாழ்க்கை பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது. முன்பக்கம் நம்பர் விழுந்தால் அது இறைவனின் பரிசு, பின்பக்கம் நம்பர் விழுந்தால் அவனின் சோதனை.

3.   நடப்பது நடக்கட்டும்; நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடு. நிம்மதியான தூக்கம் வரும்.

4.  சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் வாழ்க்கை.

5.  குற்றங்கள் மூலம் நியாபங்களைச் சேகரியுங்கள், தவறுகளின் மூலம் அனுவபத்தைச் சேகரியுங்கள், கர்மத்தின் மூலம் ஞானத்தைச் சேகரியுங்கள். நண்பர்களின் மூலம் புத்தியைச் சேகரியுங்கள்.

6. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனைகள் இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.

7. காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கும்.

8. உனக்கு இவ்வுலகம் சொந்தமில்லை, இவ்வுலகத்திற்கு நீதான் சொந்தம்.

9. தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

10. அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

11. செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலி காட்டாமல் மறையமாட்டாது.

12. அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசை முடிந்துவிட்டால் வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது.

13. அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் சிரமப்படுவது போலவும் சிலருக்கு பிரம்மை. ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள் பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் "கெத்தாக" இருக்க உதவும் 10 விஷயங்கள்...!
Kannadasan

14. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.

15. வியர்வை துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால் அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இருள் மட்டுமே தெரியும். அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நட்சத்திரங்கள் தெரியும். ஆனால் கண்ணதாசனுக்கு பகலிலும் நட்சத்திரங்கள் தெரிந்தது போல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com