கவிதை - டேய் தம்பி...

Awarness kavithai
kavithaiImage credit - imagefinder.com
மரிய சாரா

நான் மரிய சாரா. எண்ணங்களில் எப்போதும் சிந்தனைகள். அந்த சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து எழுதிக்கொண்டிருப்பது இயல்பாகவே எனக்குள் இருக்கும் ஆர்வம், திறமை எல்லாம். இந்த எனது இனிய பயணத்தில் கல்கியுடன் கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறேன்.

Updated on

டேய் தம்பி.....

விதியின்னு வந்துபுட்டா

வழியேதுமில்லையின்னு

சொல்லி வச்சான் பாரு ஊருக்குள்ள

மதி வெச்சி எட்டு வெச்சா

விதி ஒன்னு மாறுமுன்னு

சொல்லித் தாரேன் கேளுகண்ணு...

பொல்லாத உலகமடா - இது

போட்டி போட்டு உருளுதடா

கண்ணு ரெண்ட மூடிக்கிட்டா காலம் நின்னு போகுமுன்னு

நெனப்பால அளக்காத நீயும்

பொழப்பத்து திரியாத...

டேய் தம்பி, விதி ஒன்னு மாறுமுன்னு சொல்லித்தரேன் நீ கேளுகண்ணு...

கூட்டத்தோட ஓடாதே - கொள்க

ஒன்னு நெனப்புல இருந்தா

உன் கூரை மேல ஆகாசம் வரும்

என்ன சொன்னா என்னான்னு

நிக்காம நீட்டி நடந்தா

விதிகூட மண்ணாட்டம் தான்

டேய் தம்பி...

logo
Kalki Online
kalkionline.com