நிலையாமை நிலைத்த
நிலவுலகிதுவே!
மாற்றம் ஒன்றே
மாறாத் தன்மைத்தே!
வளர்ச்சி என்பதே
விரையும் மாற்றத்தாலே!
குழந்தையின் வளர்ச்சியே
குமரியாய் மாற்றம்.
சைகையே குறியீடாய்ச்
சித்திரமே எழுத்தாய்.
பனையோலை குறிப்பேடு
புத்தகமாய் உருமாற்றம்.
கிணற்று நீர்
குழாயில் குடிநீராய்.
உலகத்தோடு ஒட்டவொழுக
உவந்து நடக்கலாம்.
சோம்பித் திரிந்தால்
சோதனையே வரும்.
சுறுசுறுப்பாய் மாற
சுடர்விளக்காகலாம்.
மனதிலும் மாற்றம்
மலர்ச்சியை நல்கும்.
விதியென முடங்காது
மதியால் வென்றிடு.
வாழ்க்கைச் சக்கரமே
வாட்டமும் மலர்ச்சியும்.
வாடிடத் துவளாதே
வளர்ச்சியில் துள்ளாதே.
மாறிடத் தானே
மலர்ச்சியும் வரும்.
மாற்றுச் சிந்தனையால்
மலருமே புதுயுகம்.