கவிதை - வெற்றிக்கொடி கட்டு!

motivation image
motivation imageImage credit - pixabay
Updated on

வாழ்வது ஒருமுறை

வாழ்ந்திடு,சிறப்பாய்.

 

தன்னலம் பேணாதே

அன்போடு பேசுக.

 

அருளோடு உதவுக

அடக்கத்தை விரும்புக.

 

சீலத்தோடு வாழ்ந்திடு

சிறப்பாய் உழைத்திடு.

 

கடமையை ஆற்றிடு

களிப்போடு செய்திடு.

 

இலக்கினை நோக்கி

இனிதாய்ப் பயணித்திடு.

 

தோல்வியை மிதித்திடு

தடையினைத் தாண்டிடு.

 

மேடு பள்ளங்களை

மேன்மையாய்க் கடந்திடு.

 

சறுக்கிடப் புலம்பாதே!

சாதிக்க எண்ணிடு.

 

தன்னம்பிக்கையை ஊன்றிடு

துணிவோடு நின்றிடு.

 

பலரும் சென்ற

பாதையை ஒதுக்கு.

 

உனக்கென தனிப்பாதை

உருவாக்கி மகிழ்ந்திடு.

 

வறியோர்க்கு உதவிடு

வாட்டத்தை அகற்றிடு.

 

பிறரை இகழாதே

புறம் கூறாதே.

 

முயற்சியை நாளும்

பயிற்சி ஆக்கிடு.

 

முன்னேற நினைத்திடு

உன்னால் முடியும்.

 

உச்சம் தொடலாம்

உயர்வாய் வாழலாம்.

 

வெற்றிக்கொடி நாட்டலாம்.

வாகை சூடலாம்.

logo
Kalki Online
kalkionline.com