ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

Know this first before starting a business.
Know this first before starting a business.

ன்றைய காலத்தில் பலருக்கு பல விதமான ஆசைகள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது. ஏனெனில் காலம் முழுவதும் பிறருக்கு வேலை செய்வதை விட, தனக்குத்தானே ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் எழுகிறது. 

நீங்களும் அத்தகைய எண்ணம் கொண்டவராக இருந்தால், உண்மையிலேயே உங்களுக்கு தொழில் தொடங்குவதில் ஈடுபாடு இருக்கிறதா? அல்லது பிறர் யாராவது சொல்கிறார்கள் என்பதற்காக அதை தொடங்க விரும்புகிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும். தொழில் தொடங்குவது என்னைக் கேட்டால் நல்ல ஒரு சிந்தனைதான். ஆனால் அதனுடைய வரலாற்றில் உள்ள வெற்றி சதவீதத்தை அடிப்படையாகப் பார்த்தால், நூற்றுக்கு 90 முதல் 95 சதவீத தொழில்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளது. 

உங்களுக்கு உங்களுடைய தொழில் மீது 100% நம்பிக்கை இருந்தால் மட்டும் அதில் இறங்குங்கள். பிறருடைய சொல்லைக் கேட்டுக் கொண்டு, தெரியாத தொழிலைத் தொடங்க வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் முடிவெடுங்கள்.

உங்களிடம் பத்து லட்சம் இருக்கிறது. அதைக்கொண்டு என்ன தொழில் தொடங்கலாம் என சிந்திக்காமல், உங்களிடம் ஒரு புதிய தொழில் சார்ந்த அறிவு இருக்கிறது அதை எப்படி சரியான முறையில் ஒரு தொழிலாக மாற்றலாம் என்று யோசித்தால், நிச்சயம் உங்களுடைய தொழில் தனித்து நிற்க வாய்ப்புள்ளது.

எதற்கும் ஒருமுறை தொழில் தொடங்குவதற்கு முன்பாக Zero To One என்ற புத்தகம் படித்துவிடுங்கள். உங்களுடைய அறிவு தான் உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தும் என்பதை நம்புங்கள். உங்களுடைய தொழில் சார்ந்து பிறர் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம். தொடக்கம் முதல் இறுதிவரை பல ஆலோசனைகளை பிறரிடம் நீங்கள் கேட்டிருந்தாலும், இறுதியில் நீங்கள் எடுக்கும் முடிவானது உங்களைத் திருப்திபடுத்தும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.

என்னிடம் யாராவது ஆலோசனை கேட்டால் பெரும்பாலும் நான் சொல்வது இதுதான்.

  • உங்களுக்கு ஒரு விஷயத்தில் 100% நம்பிக்கை இருந்தால், களத்தில் இறங்கி அதை முயற்சித்துப் பார்த்துவிடுங்கள். யார் சொல்வதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

ஆனால் அந்த முடிவில் வரும் பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மிக மிக முக்கியம். நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் நம்மை பயமுறுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

சுய சிந்தனையில் இருப்பவர்களை முட்டாளாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது. எனவே எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நீங்கள் எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக எந்தத் தொழிலையும் எந்த செயலையும் செய்ய வேண்டாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com