நாம் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை குழந்தைத் தனமாக இருப்பதெல்லாம் சரிதான். அதனால் எந்த பாதிப்புகளும் கூட ஏற்படாது. ஆனால் கல்லூரி சென்ற பிறகும் அடுத்து வேலைக்கு செல்லும்போதும் நமக்கென சில பொறுப்புகள் அதிகரிக்கும். அந்த சமையங்களில் Mature ஆக மாறுவது அவசியம்.
இந்த Maturity என்பது செயல், எண்ணம், நடத்தை ஆகியவை சேர்ந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் பொறுப்புணர்வைத்தான் maturity என்றும் கூறுவார்கள். இந்த விஷயத்தில் சிலர் அதனைத் தவறாகவும் புரிந்துக் கொள்கிறார்கள். அதாவது பெண்களுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் அவர்கள் வீட்டு வேலைகள் செய்தாலும் பொறுப்பு வந்துவிட்டது என்று சிலர் கூறுவார்கள். அதேபோல்தான் ஆண்களுக்கும். ஆனால் உண்மையில் அவையெல்லாம் பொறுப்புணர்வு மேலோங்கியப் பிறகு செய்யக்கூடிய வேலைகள். அந்த வகையில் பொறுப்புணர்வைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை:
1. நம்மை ஒருவர் எவ்வளவு வேதனைப்படுத்தினாலும் திருப்பி அவர்களை வேதனைப்படுத்த மனம் ஒத்துழைக்காது.
2. ஒருவருக்கு ஒரு விஷயத்தை எவ்வளவு சொல்லியும் புரியவில்லை என்றால், மீண்டும் முயற்சி செய்யக்கூடாது. அவர்கள் அனுபவம் மூலம் புரிந்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும்.
3. ஒருசில சூழ்நிலைகளில் எவ்வளவு கோபம் வந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை என்று புரிந்துகொண்டு அமைதியை கையாள்வது.
4. ஒருவரிடம் இருக்கும் பணத்தையும் சொத்துக்களையும் கருத்தில் கொண்டு பழகாமல், குணத்தை வைத்துப் பழகுவது.
5. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாமல் நமக்கான வேலைகளை ஆர்வத்துடனும் நம் விருப்பத்துடனும் செய்வது.
6. ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதும் சாதரண வாழ்க்கையை விரும்புவதும் பொறுப்புணர்ச்சியின் அடையாளமே.
7. ஒருவர் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் ஒரு கட்டத்தில் அவரை மன்னிக்கத் தோன்றும். அங்கு ஆரம்பமாகிறது மன்னிக்கும் குணம் என்ற பொறுப்பு.
8. உங்கள் பிறந்தநாளை உங்களுக்கு நெருக்கமானவர்கள் நியாபகம் வைத்துக்கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பெல்லாம் குறைந்துவிடும். வாழ்த்து சொல்லவில்லை என்று கவலையும் பட மாட்டீர்கள்.
9. அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரு பிரச்சனையை முழுவதுமாக ஆராய்ந்தே செயல்படுவீர்கள்.
10. ஆடை ஆபரணங்கள் மீது இருக்கும் பிரியங்கள் படிப்படியாக குறையும்.
11. நீங்கள் செய்யும் பணியை விட உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.
12. பணத்தை விட அன்பின் மேல் உள்ள மரியாதை அதிகரிக்கும்.
13. கெட்ட சூழ்நிலைகளையும் தனக்கு ஏற்ற மாதிரி நல்ல சூழ்நிலையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றிவிடுவீர்கள்.
14. விதி என்பது ஒரு பெயர் மட்டுமே என்பதைப் புரிந்துக்கொள்வீர்கள். அதேபோல் கடின உழைப்பு மட்டுமே நிரந்தரம் என்பதும் புரியும்.
15. அனைத்திலும் முக்கியமான ஒன்று, சாப்பாட்டில் இருக்கும் மசாலாப் பொருட்களை ஒதுக்கி வைக்காமல் சேர்த்து சாப்பிடுவீர்கள். ஏனெனில் சுவை மறந்து ஆரோக்கியம் மேல் தானாக அக்கறை கொள்வது உங்களுக்கே தெரியாது.