பெண்களே கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள்!

Ladies, think differently!
Ladies, think differently!
Published on

முதலில் உங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள கோட்பாடுகளில் இருந்து வெளிவர முயலுங்கள்.

பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதுதான் பெண்மை, அதுதான் பெண்மை என்று விளக்கம் கொடுத்து ஓர் வட்டத்தினுள் உங்களை அடைப்பார்கள்.

அது அடிமைத்தனமாக உங்களுக்கு தெரிந்தாலும், அது ஒரு சுகமான வட்டம். நீங்கள் என்னதான் ஆயிரம் விஷயங்களில் முட்டி மோதினாலும், இறுதியில் குடும்பம் என்கிற கயிற்றில் கட்டி வீட்டில் அடைக்கும் இந்த சமூகம்.

அதிலிருந்து சற்று வெளியே வாருங்கள்.

  • மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், தலைசிறந்த பணக்காரர்கள், பட்டியலில் பெண்கள் பெயர் இடம் பெற்று பார்த்துள்ளீர்களா? அப்படியே சாதித்தாலும் அவர்கள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. அந்தத் தலைவிதியை மாற்ற முயலுங்கள்.  

உங்களால் தனித்து இயங்க முடிந்த சூழல் இருந்தும், பிறருடைய அனுமதிக்காக காத்திருக்கும் பண்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, கணவனே கண்கண்ட தெய்வம் என்று நீங்கள் கூறுவதாலையே, ஆண்கள் இன்றளவும் உங்களை கீழ் நிலையிலேயே வைத்திருக்க காரணமாக உள்ளது.

உங்களுக்கும் கனவுகள் உண்டு, இலக்குகள் உண்டு, புதியதை முயற்சிக்கும் தைரியம் உண்டு என்பதை எடுத்துரைத்து, முதலடி எடுத்து வையுங்கள்.

முதலில் ஆண்களையும், இந்த சமூகத்தையும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, நீங்கள் என்ன முயற்சித்தீர்கள், வாய்ப்புகளை எப்படி உருவாக்கினீர்கள், கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதைப் பாருங்கள்…

சராசரி பெண்களைப்போல் சிந்திக்காமல், சற்று மாற்றி சிந்தித்துப் பாருங்கள். அனைத்து விஷயங்களும் சரியான கோணத்தில் தெரிய ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com