சதுரங்கத்தில் இருக்கும் சாதுர்யங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Motivation Image
Motivation Imagepixabay.com

நாம் அனைவருமே சதுரங்க விளையாட்டினை ஒருமுறையாவது விளையாடியிருப்போம். சிலருக்கு அது விளையாட்டாகவே முடிந்துவிடும், சிலருக்கு அது வாழ்க்கையின் தத்துவத்தைக் கற்று தரும். நன்றாக விளையாட்டை உற்று நோக்கினால் நம் வாழ்க்கையோடு அழகாக அதை ஒப்பிடலாம்.

நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும்போதுதான் ஆயிரம் பேர் அதை தடுக்க வந்து நிற்பார்கள். நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், அந்த தடைகளையெல்லாம்   வெட்டி வீழ்த்தி விட்டு முன்னேறி செல்ல வேண்டும்.

யாரையுமே ரொம்ப சுலபமாக எடுத்துக்கொள்ள கூடாது. சிறு துரும்பு கூட பல் குத்த உதவும். அதுபோலத்தான் சின்ன சிப்பாய்தான் ராஜாவை காப்பாற்ற கேடயமாக இருக்கும்.

நமக்கு எப்போது எங்கேயிருந்து பிரச்சனை வரும்னு சொல்ல முடியாது. எந்த பிரச்சனை வந்தாலும் அதை கையாள கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நமக்கு தெரியாமலேயே நம்மை கீழே விழ வைக்க வேலைகள் நடக்கலாம். அவங்க செக் மேட் சொல்லுற வரை நமக்கு அது தெரியாது.

முதல் முறை விளையாடும்போது தோற்று போனாலும் அடுத்த முறை விளையாடும்போது அதே பிரச்சனை வந்தால் மாற்றி யோசித்து விளையாடி ஜெயித்திருப்பீர்கள். ஒரே பிரச்சனைக்கு பல தீர்வுகள் உண்டு. அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதே முக்கியமாகும்.

எல்லோருக்குமே பார்ப்பதற்கென்று ஒரு வேலை இருக்கிறது. ராணி அது வேலையை பார்க்கும், ராஜா அது வேலையை பார்க்கும், சிப்பாய் அது வேலையை பாக்கும். நீங்களும் உங்கள் வேலையை பாருங்கள். யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்க தேவையில்லை.

எந்த சின்ன விஷயத்தையும்  அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக விடக் கூடாது. சிப்பாய் மெதுவாக நகர்ந்து கடைசி கட்டத்திற்கு வந்து விட்டால் ராணியாகி விடும். எதிரிகளிடம் இரண்டு ராணி இருந்தால் எப்படியிருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.

நம்முடைய வாழ்க்கையோ, விளையாட்டோ எப்போ எது மாறும் என்று தெரியாது. கடைசி நிமிடங்களில் கூட விளையாட்டு அப்படியே மாறிய தருணங்களும் உண்டு. எனவே எது செய்தாலும் கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் செய்து முடியுங்கள்.

இதையும் படியுங்கள்:
செரிமான சக்தி சீராக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்!
Motivation Image

செஸ் என்பது விளையாட்டு மட்டுமில்லை. அது ஒரு போர். போரிலே நீங்கள் பயன்படுத்த வேண்டியது இதயத்தை இல்லை மூளையை என்று புரிந்துக்கொள்ளுங்கள். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். எந்த விஷயத்திற்கும் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்தி விட்டு மூளையை பயன்படுத்தி யோசித்தால் தீர்வு கிடைக்கும்.

உங்களுடைய எதிரியை எப்போதுமே குறைத்து எடை போடாதீர்கள். ஏனெனில் சிப்பாயால் கூட ராஜாவை செக்மேட் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சதுரங்கம் விளையாடுபவர்களுக்கு தெரியும் எப்போதும் வெள்ளை காயே முதலில் அடி எடுத்து வைக்கும். பல முறை ஏன் இப்படி ஒரு பழக்கம் என்று யோசித்ததுண்டு. இருப்பினும் முதலில் யார் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை கடைசியில் யார் ஜெயிக்கிறாங்கங்குறது தானே முக்கியம் என்று தோன்றியது.

சதுரங்கம் சொல்லித் தந்த இந்த தத்துவங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துக்கொண்டால் வெற்றி நமக்கே உரியதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com