உங்களை நீங்களே நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

Love Yourself
Love Yourself
Published on

தன்னைத்தானே விரும்புதல் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் எவ்வளவு நம்மை நேசிக்கிறோமோ, அவ்வளவு நம் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தன்னை நேசிப்பது என்பது தன்னைப் பற்றி நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பது, தன்னை ஏற்றுக்கொள்வது, தன் வலிமைகளைப் போற்றி, பலவீனங்களை மேம்படுத்துவதாகும்.

தன்னைத்தானே விரும்புதல் மனிதனின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறது. தன்னை நேசிக்கும் ஒருவர் பொதுவாக மகிழ்ச்சியாக, நம்பிக்கையுடன் இருப்பார். அவர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவராக இருப்பார். தன்னை நேசிக்கும் ஒருவர் மற்றவர்களை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்வார். இது ஆரோக்கியமான உறவுகளை உருவாக்க உதவும்.

தன்னைத்தானே விரும்புவதன் நன்மைகள்: 

  • தன்னை நேசிப்பது மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநிலை பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.

  • தன்னை நேசிக்கும் ஒருவர் தனது திறமைகளை நம்பி, புதிய விஷயங்களை முயற்சி செய்யத் தயாராக இருப்பார்.

  • மற்றவர்களுடன் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள தன்னை அதிகம் நேசிப்பவரால் மட்டுமே முடியும்.

  • தன்னை நேசிப்பது தன்னம்பிக்கையை அதிகரித்து, வாழ்க்கையில் வெற்றிபெற உதவும்.

தன்னைத்தானே விரும்புவதை எவ்வாறு மேம்படுத்துவது:

உங்களைப் பற்றி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, "நான் நல்லவன்" என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் சரியானவர்கள் அல்ல. நம்மிடம் பலவீனங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டு, அவற்றை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

உங்களின் வலிமைகளைப் போற்றி, பலவீனங்களை மேம்படுத்துங்கள். உங்களுக்கு என்னென்ன வலிமைகள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்னென்ன பலவீனங்கள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
மாமியார்களே… இதெல்லாம் உங்க மருமகள் கிட்ட தெரியாமல் கூட கேட்டுடாதீங்க! 
Love Yourself

உங்களை ஒருபோதும் மற்றவர்களுடன் ஒப்பீடு செசெய்யாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நீங்கள் உங்களை குறைத்து மதிப்பிடுவீர்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்வதன் மூலம், உங்கள் திறமைகளை கண்டுபிடித்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது தவிர, எப்போதும் நேர்மறையான நபர்களுடன் பழகுங்கள். இவற்றை நீங்கள் முயற்சித்து, உங்களை முதலில் நேசிக்க தொடங்கினால் மட்டுமேஃ வாழ்க்கையில் நீங்கள் காணும் அனைத்தும் அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com