வெற்றியை மறைக்கும் இந்த தூசியை அகற்றுவோம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை நமக்கு முன் வெற்றி பெற்றவர்கள் இடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றிக்குத் தேவையான நிறைய வழிமுறைகளை கற்றுத் தந்து சென்றுள்ளனர் சாதித்தவர்கள். இவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே ஒரு விஷயம் அறிவையும் மனதையும் திறந்து வைத்தால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.

ஆனால் ஒரு விஷயம் இங்கு கவனிக்க வேண்டும். மனதையும் அறிவையும்  முழுமையாக திறந்து வைப்பது எப்படி? நமக்குள் இருக்கும் ஒரு முக்கியமான தூசி மனதையும் அறிவையும் மறைத்திருந்தால் எப்படி நம்மால் வெற்றி பெற முடியும்? என்ன தூசியா? ஆம் எல்லோருக்குள்ளும் இருக்கும் தூசிதான். அதுதான் நான் என்னும் அகந்தை அல்லது ஈகோ. இந்த தூசியை அகற்றினால் மட்டுமே நம்மால் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

கடவுளிடம் பக்தி கொண்ட இருவர் கடவுளுக்கு படைப்பதற்காக பிரசாதங்களை கொண்டு வந்தனர். அதில் ஒருவர் அரசர். ஒருவர் அவரிடம் பணி செய்பவர். கடவுள் முதலில் தொழிலாளி தந்த பிரசாதத்தையே எடுத்துக் கொண்டார்.

அரசருக்கோ மிகுந்த கோபம் உண்டானது கடவுளிடமே கோபமா? ஆமாம். அவர் அரசர் ஆச்சே "கடவுளே உமக்கு நித்திய கைங்கரியம் செய்து படையல் போடுவது முதல் அனைத்தும் என்னுடைய பணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீயோ ஒன்றுமே செய்யாத தொழிலாளி தரும் பிரசாதத்தை முதலில் உண்ணுகிறாயே. இது நியாயமா? "என்று கேட்டார்.

உடனே கடவுள் "இதுதான் உன்னிடம் பிரச்சனை. எதற்கெடுத்தாலும் நான் நான் என்று கூறுகிறாயே. நீ எவ்வளவுதான் நல்ல மனதோடு செயல்கள் செய்தாலும் இந்த நான் என்னும் தூசி அதை மறைத்து விடுகிறதே. அதை அகற்றிவிட்டு வா உன்னுடைய பிரசாதத்தை முதலில் எடுத்துக் கொள்கிறேன்" என்று கூறி கண்ணை மூடிக்கொண்டார். கடவுளாகவே இருந்தாலும் நான் என மமதையுடன் தரப்படும் பூஜையோ அபிஷேகமோ நிச்சயம் அவருக்கு சென்று சேராது என்பதுதான் உண்மை.

நமது எதிரி வேறெங்கும் இல்லை. நமது முதல் எதிரியே நான் என்னும் அகந்தைதான். என்னால்தான் எல்லாமே முடியும், நான்தான் அனைத்திலும்  சிறந்தவன் என்று மனதில் தோன்றும்  இறுமாப்பு இறுதியில் தோல்வியைத்தான் தழுவும்.

இதையும் படியுங்கள்:
லெட்டூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Motivation image

மேலும் எந்த மனதில் 'அகந்தை' இருக்கிறதோ அங்கு தெளிவற்ற குழப்பமும் இருக்கும். குழப்பம் வெற்றிக்குத் தடையாகும். சரி. நான் எனும் தன்னம்பிக்கைதானே வெற்றிக்கு முதல் தேவை?  என்றீர்களே உண்மை. ஆனால் செயலை முன்னோக்கி செலுத்தும் தன்னம்பிக்கை என்பது வேறு, செயலை பின்னடைவைத் தரும் அகம்பாவம் என்பது வேறு.

கண்ணில் விழுந்த தூசு போன்ற மனதில் படிந்த இந்த நான் எனும் அகங்காரத்தை சுத்தம் செய்யாமல் நம்மால் எதையும் காண இயலாது, தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தைப் பாருங்கள். புதிய உலகம் தெரியும். புரியும். வெற்றியும் உங்கள் பக்கம் எளிதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com