இந்த 10 விஷயங்களை ஒருபோதும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்… மீறினால்? 

10 Things to Stop Expecting from Other People
10 Things to Stop Expecting from Other People

எதிர்பார்ப்புகள் என்பதுதான் பிறருடன் நாம் எப்படி பழகுகிறோம் என்பதை வடிவமைக்கிறது என்றாலும், எல்லாவற்றிற்குமே பிறரையே எதிர்பார்ப்பது, உறவுகளுக்கு மத்தியில் பிரச்சனைகளையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். பிறரிடம் எதையும் எதிர்பார்க்காமல் பழகும்போதே அந்த உறவில் நிம்மதி நீடிக்கும். இந்தப் பதிவில் எதுபோன்ற 10 விஷயங்களை நாம் பிறரிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. 

  1. Perfection: பிறர் எப்போதுமே சரியாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். இவ்வுலகில் உள்ள யாராலும் எல்லா தருணங்களிலும் சரியாக நடந்து கொள்ள முடியாது. எனவே குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு நபரின் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ள முற்படுங்கள். 

  2. புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் எதையுமே தெரியப்படுத்தாமல் அவர்களாகவே உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் எல்லா நபர்களும் ஒருவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளும் தன்மையுடன் இருக்க மாட்டார்கள். எனவே நல்ல உறவை வளர்ப்பதற்கு முறையான கம்யூனிகேஷன் அவசியம். 

  3. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்: ஒவ்வொருவருக்கும் சோகம், கோபம் மற்றும் விரக்தி உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். எனவே மற்றவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. 

  4. உங்களுக்காக மாற வேண்டும்: உங்களது மகிழ்ச்சிக்காக பிறர் மாற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர்கள் மாறுவது அவர்களின் சொந்த விருப்பமாக இருக்கட்டும். நீங்களாக எதையும் திணிக்காதீர்கள். 

  5. ஆதரவு: பிறர் உங்களுக்கு கொடுக்கும் ஆதரவு மதிப்புமிக்கதாக இருந்தாலும், அவர்கள் கட்டாயம் உங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. மனிதர்கள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே பிறருடன் பழகுவார்கள். இதை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். 

  6. மகிழ்ச்சியை தியாகம் செய்வது: உங்களது தனிப்பட்ட நலனுக்காக பிறர் அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். ஆரோக்கியமான உறவுகளில் பரஸ்பர ஆதரவு மிகவும் முக்கியம். எனவே அவர்களது நலனிலும் அக்கறை செலுத்துங்கள். 

  7. நேரம் கொடுக்க வேண்டும்: நேரம் என்பது எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் பிறர் நமக்காக செயல்படுவார்கள் அல்லது பதிலளிப்பார்கள் என எதிர்பார்ப்பது தேவையற்ற மன வேதனையை அளிக்கலாம். எனவே பிறர் உங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள். 

  8. உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்: பிறர் உங்களுக்கு ஆதரவு அளிப்பது சரியானதுதான் என்றாலும், உங்கள் எல்லா பிரச்சினைகளையும் மற்றவர்களே தீர்க்க வேண்டும் என எதிர்பார்ப்பது முற்றிலும் தவறானது. இந்த உலகில் யாரும் யாருக்காகவும் முழுமையாக இருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் அனைத்தையும் நீங்கள்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

  9. விசுவாசம்: பிறர் உங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு முன், நீங்கள் எத்தனை பேருக்கு நன்றி உணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உறவுகளுக்குள் எதையும் எதிர்பார்த்து செய்யும்போது அதில் பிரச்சினைகள் உண்டாகும். நீங்கள் ஒரு நபருடன் முறையாகப் பழகினாலே விசுவாசம் தானாக இருக்கும். எனவே தேவையில்லாமல் யாரிடமும் அதை எதிர்பார்க்க வேண்டாம். 

  10. உங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஒவ்வொரு நபருக்கும் கருத்துக்கள், விருப்பங்கள் போன்றவற்றில் வித்தியாசங்கள் இருப்பது இயற்கையே. எனவே நீங்கள் சொல்லும் கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கும் ஒரு மாற்று சிந்தனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, நிதர்சனத்துடன் ஒத்துப்போவதே நல்லது.

இதையும் படியுங்கள்:
வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 
10 Things to Stop Expecting from Other People

இந்த பத்து விஷயங்களை நீங்கள் பிறரிடம் எதிர்பார்க்காமல் இருந்தாலே வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். இது உங்களுக்கும் பிறருக்கும் இடையேயான உறவை வளர்ப்பதற்கு பெரிதளவில் உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com