லைப் ஆகணுமா ஈஸி... அப்போ மாத்தி யோசி!

Motivation Image
Motivation Imagepixabay.com

ம் ஒவ்வொருத்தரும் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு விதமாக வாழ்கிறோம். சிலர் தங்களுக்கு பிடிச்சதை செஞ்சிக்கிட்டு வாழறாங்க.  சிலர் வாழணும்ங்குறதுக்காக அவங்க செய்யறதெல்லாம் பிடிச்சிருக்குன்னு நினைச்சிக்கிறாங்க. இரண்டுக்குமே வித்தியாசமிருக்கு இல்லையா?

சரியாக சொல்லணும்னா இங்கே நாம எல்லோருமே ஒரே பேட்டர்னில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே மாதிரியான பழக்க வழக்கம், ஒரே இடம், ஒரே வேலை, ஒரே கருத்து, ஒரே விஷயத்தை நினைத்து திரும்ப திரும்ப கவலைப்படுவது, ஒரே மக்களை சந்திப்பது, எல்லாவற்றையும் ஒரே மாதிரியே திரும்பத் திரும்ப செய்வது சலிப்பாக இல்லையா?

ஒரு மாற்றத்திற்காக, எல்லாவற்றையும் வேறு மாதிரி வித்தியாசமாக செஞ்சி பாருங்களேன். உங்களோட வாழ்க்கையில் கொஞ்சம் புதுமையை புகுத்திதான் பாருங்களேன்?

மற்றவர்களை பார்த்து சூடு போட்டு கொண்டது போதுமே! இனி நமக்கு பிடிச்சதை நமக்காக செய்து வாழ்ந்து பார்க்கலாமே!

மாறுதல் என்பது எப்போதுமே பெரிதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சின்ன சின்ன மாறுதல்கள் கூட வாழ்க்கையில் பெரிய விளைவுகளையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

நிறைய மக்கள் புதுமையையும் மாற்றத்தையும் பார்த்து தயங்குவதற்கு காரணம், சூழ்நிலைகளோ, வாய்ப்பு கிடைக்காததோ, மாற்றத்தை விரும்பாமல் கம்ஃபர்ட் ஸோனிலேயே இருப்பதோ என்று பல காரணங்கள் இருக்கின்றது.

இதையும் படியுங்கள்:
2024 புத்தாண்டிற்கான 12 ஆரோக்கியமான தீர்மானங்கள்!
Motivation Image

எனினும் மாறுதல் என்று இங்கே குறிப்பிடுவது, வேலையை விட்டு மாறுவதோ அல்லது தொழில்துறையில் மாற்றமோ என பெரிய மாறுதல்களாக இல்லாமல் சின்ன சின்ன மாறுதல்கள் தங்களுக்கு மகிழ்ச்சியூட்டக் கூடியதாக செய்யும் பொழுது உங்கள் அணுகுமுறையில், எதிர்வினையில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு நபரையோ பார்க்கும் பார்வையை மாற்றிப் பாருங்கள். அதற்கான அர்த்தமும் இதுவரை நீங்கள் அதை பார்த்ததில் இருந்து மாறுப்பட்டு தெரியும்.

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்று சொல்வார்கள். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் கொண்டு வரும் சிறு சிறு மாற்றங்கள்தான் நாம் போக வேண்டிய பாதையை முடிவு செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com