
தோல்வியடைவதற்கு பல வழிகள் இருக்கலாம். எனினும் வெற்றி பெற ஒரே ஒரு வழி உழைப்பு மட்டுமே.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீ உன் இலக்கை அடைவதை எவராலும் தடுக்க முடியாது.
தோல்வி உன்னைத் துரத்தினால், நீ வெற்றியை நோக்கி ஓடு.
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்யாசம்தான்
கடமையை செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி.
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி
நினைத்ததை முடிக்கும்வரை செய்வதே உண்மையான முயற்சி.
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும், முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும். முடங்கி விடாதே தொடர்ந்து முயற்சி செய்.
சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம்தான் ஆயுதம்,
கோபமல்ல.
உன்னை யாராவது தூக்கி எறிந்தால், விழுந்த இடத்தில் மரமாகி விரிந்து நில் எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை!
உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால்
அதற்காக வருந்தாதே இறைவன் உன்னை மேலே தூக்கிவிட விரும்புகிறான் என்று நம்பு.
செய்யும் தொழிலை மன நிறைவோடு மகிழ்ச்சியாக
செய்தாலே போதும் - வெற்றி நம் கையில்!
இலக்குகளை நிர்ணயித்தல், உங்களால் பார்க்க
முடியாததைப் பார்ப்பதற்கான முதல் படி.
பெரிதாக அடிபடாதவர்களால் பெரிய வெற்றிகளைக் காண இயலாது.
உன்னைப் பற்றி உயர்வாகவே நினை
அது உன்னை நீ நினைத்த உயரத்திற்கு இட்டுச் செல்லும்.
போலி உறவுகள் நஞ்சுக்குச் சமம் புரிந்துகொண்டு கழன்றுவிடு உன் வெற்றி நிச்சயிக்கப்படும்.
உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று வருந்தாதே.. உனக்குத் தெரிந்தது கூட பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
போராடித்தான் பெண் தாயாகிறாள்
புழு பட்டாம் பூச்சியாகிறது
விதை மரமாகிறது
நீயும் வாழ்க்கையோடு போராடு, வரலாறு படைப்பாய்.
பொறுமை, திறமை, அச்சமின்மை இம்மூன்றையும்
வளர்த்துக்கொள். வெற்றி உன்னைத்தேடி வரும்.
நீ முயற்சித்தால் உன் வாழ்க்கையை நீ நினைத்தபடி
மாற்றியமைக்க முடியும்.
நல்லது, மிக நல்லது, ஆகச் சிறந்தது... இந்த வேறுபாடுகளை அப்படியே விட்டு விடாதீர்கள். நல்லதை மிக நல்லதாக்கும் வரை... மிக நல்லதை ஆகச் சிறந்ததாக்கும்வரை முயற்சி செய்து கொண்டேயிருங்கள். வெற்றி உங்கள் வசப்படும்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. அவற்றை செயலாக்க தொடர்ந்து முயலும் துணிச்சல் உங்களுக்கிருந்தால்!
உங்கள் முயற்சியை கைவிடுவதுதான் உங்களது மிகப் பெரிய பலவீனம். மீண்டும் ஒருமுறை முயல்வோம் என்பதுதான் வெற்றிக்கான வழி.
உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால் உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்.
சத்தமின்றி கடினமாக உழையுங்கள். உங்கள் வெற்றி உங்கள் சத்தமாக இருக்கட்டும்.
முயற்சியின் எல்லை மூச்சுள்ள வரை
வெற்றியின் எல்லை முயற்சி உள்ள வரை.
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது! ஏனெனில் யாராலும் உன் கால்களைக்கொண்டு நடக்க முடியாது.
எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்ததல்ல... செதுக்க வந்ததே. எனவே தொடர்ந்து முயன்று வெற்றிக் கனியை எட்டிப் பறி.