தன்னம்பிக்கை இழக்காமல் வாழுங்கள் வெற்றி நிச்சயம்!

Motivation image
Motivation image

ம்மில் பலர் எனக்கு வெற்றி என்பதே எதிலும் கிடைப்பதில்லை என்று மிகவும் சலித்துக் கொள்வார்கள் ஆனால் அப்படிப்பட்ட நபர்களை நீங்கள் ஆழ்ந்து கவனித்தால் தெரியும் அவர்களுக்கு துளி கூட தன்னம்பிக்கை என்பதே இருக்காது.

தன்னம்பிக்கை இல்லாத மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற இயலாது. அவர்களை தோல்விகள்தான் என்றென்றும் துரத்தும். தன்னம்பிக்கையோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

"200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அப்போதும் அனைவரும் கைகளைத் தூக்கினர்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியோடு இருக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும்?
Motivation image

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும்போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com