லூயிஸ் எல். ஹே (Louise L. Hay) சொன்ன வெற்றிக்கான எளிய வழி இதுதான்!

A confident writer  Louise L. Hay
writter Louise L. Hay
Published on

து ஒரு சிறைச்சாலை அங்கிருந்த வார்டன் மற்ற வார்டன்களில் இருந்து வித்தியாசமானவர். குற்றம் என்பது எதிர்பாராத நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் ஒரு செயல். குற்றம் புரிந்தவர்களிலும் சாதனையாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் அவருடைய எண்ணம்.

ஒருமுறை உணர்ச்சி வேகத்தில் காவலர் ஒருவரை அடித்து விட்டு சிறைக்குள் வந்திருக்கும் பிஎச்டி பட்டம் பெற்ற இளைஞரான ராஜன் "அய்யா என்னை எனக்கே பிடிக்கவில்லை. சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிய என் வாழ்க்கை கோபத்தால் நாசமாகிவிட்டது. நான் வெளியே சென்றாலும் சிறைச்சாலையில் இருந்தவன்தானே என்ற ஏளனம் இருக்கத்தான் போகிறது. என்னால் எப்படி சாதிக்க முடியும்?" என்று புலம்பினார்.

வார்டன் "லூயிஸ் எல். ஹே ஒரு பிரபலமான அமெரிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர். "யூ கேன் ஹீல் யுவர் லைஃப்" உட்பட பல  சுயமுன்னேற்றப் புத்தகங்களை எழுதியுள்ளார், அவர் சொன்ன ஒரு எளிய வழி உள்ளது. நாளை நான் உங்களுக்கு ஒரு பொருள் தருகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறேன்" என்று சொல்லிச் சென்றார்.

ராஜன்  வெகு ஆவலுடன் இருந்தார். வார்டன் வந்தார். அவர் கைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி  இருந்தது. அதை ராஜனிடம் தந்து விட்டு சொன்னார்.

"இந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தினம்  காலை எழுந்ததும் நின்றுக் கொண்டு உங்கள் கண்களைக் கூர்ந்து நோக்கி உறுதி மொழிகளை கூறுங்கள். நான் என்னை நேசிக்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன் என்று திரும்பத் திரும்பக் கூறுங்கள்.

மேலும்  கண்ணாடியின் முன் நின்று கொண்டு இந்த ஐந்து உறுதிமொழிகளை தவறாமல் கூறுங்கள்.

1. நான் என்னை நேசிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்
2. நான் கடந்த காலத்தை விடுவித்து அதை வெளியேற்றுகிறேன்.
3. நான் அனைவரையும் மன்னிக்கிறேன், என்னையும் மன்னித்துக் கொள்கிறேன் சுதந்திரமாக இருக்கிறேன்.
4. நான் வாழ்க்கையே நம்புகிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன்.
5. தெய்வீக ஒழுங்கு முறைப்படி அனைத்தும் எனது மேன்மைக்காகவே நடைபெறுகிறது. எந்த சூழலிலும் எனக்கு நல்லது மட்டுமே நடக்கும் என் உலகில் எல்லாம் நலமே.

ஆரம்பத்தில் உங்கள் மனம் இந்த கண்ணாடியுடன் ஒன்றுபடுவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அதை வழக்கம் ஆக்கிக் கொண்டால் நிச்சயம் இந்த கண்ணாடி உங்கள் ஆத்மார்த்த நட்பாக மாறிவிடும். லூயிஸ் கூறிய இந்த எளிய வழி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்". 

இதையும் படியுங்கள்:
இந்த நாள் உங்களுக்கானது!
A confident writer  Louise L. Hay

தண்டனைக் காலம் முடிந்தது ராஜன் வெளியே சென்றார். மிகப்பெரிய பல்கலைகழகத்தின் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ராஜன் வார்டனை  சந்தித்து தன் வாழ்க்கையில் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்த உதவிய கண்ணாடி பயிற்சிதான் என்று சொல்லிவிட்டு அவருக்கு நன்றி சொல்லி சென்றார்.

எளிய வழியான இந்த கண்ணாடி பயிற்சி (Mirror Work )யை நாமும் கடைப்பிடித்து ஆழ்மனதில் நம்மிடம் உள்ள தயக்கம் மற்றும் தோல்வி பயத்தை விட்டு நீக்கினால் நாமும் வெற்றிப் பாதையை சுலபமாக அடைய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com