Online-ல் கூவாதே. நிஜத்தில் மாற்றத்தைக் கொண்டு வா!

Make Real Life Changes.
Make Real Life Changes.

ன்றைய கால இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே என்னவென்றால், உன் செயலை செய்வதற்கு முன்பே அதை பிறரிடம் வெளிப்படுத்துவது தான். அதிலும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது என்ற ஒன்று வந்தாலும் வந்துவிட்டது, நாளை முதல் இரவு வரை செய்யும் செயல்கள், உண்ணும் உணவுகள், மனநிலை, உணர்வுகள் போன்றவற்றை எல்லாம் பிறருக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 

இப்படி ஸ்டேட்டஸ் போடுவதால் யாருக்கு என்ன பலன்? நாம் எப்படிப்பட்டவர்கள், எங்கு செல்கிறோம், என்ன உண்ணுகிறோம் போன்றவற்றை பிறருக்குத் தெரியப்படுத்தி என்ன செய்யப் போகிறோம்? 

ஒருவேளை, நீங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைத்து புதிய விஷயங்களை முயற்சிப்பவராக இருந்தால், முடிந்தவரை நீங்கள் செய்யப்போகும் செயல்களை பிறரிடம் கூறாதீர்கள். அவ்வாறு அவற்றை கூறும் பட்சத்தில் அதனுடைய வீரியம் குறைய வாய்ப்புள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் செய்யும் எந்த ஒரு செயலும் நம்முடைய வாழ்வில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கும் பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் முன்னரே, பல கணக்குகளை போட்டுக் கொண்டு, பிறரிடம் வெளிப்படுத்தும்போது, ஒரு பொய்யான மனநிறைவு நம்முள் ஏற்பட்டுவிடும். அந்த மன நிறைவின் காரணமாக, நாம் செய்யப்போகும் செயலில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அது தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் அதிகமாக ஏற்படுத்தும்.

வெற்றி பெறுவேன் என்பதற்கும், வெற்றி பெற்றேன் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம். 

எனவே, நீங்கள் வெற்றி பெறும் முன்பே நான் இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன், அதை சாதிப்பேன், இதைச் சாதிப்பேன் என்று அறைகூவல் விடுக்க வேண்டாம்.

வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒன்றை எப்பொழுதும் பரிசாக வைத்திருக்கும்.

மெதுவாக செய்தாலும் சிறப்பாக செய்வதே, நம்மை ஒரு பிராண்டாக மற்றும் என்பதை உணருங்கள். உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுங்கள். பிறருடைய அடையாளங்களோடு உங்களை அடைமொழியாக இணைக்க வேண்டாம். அதேபோல பிறருடைய வெற்றி உங்கள் வெற்றி என பொய்யாக நினைக்க வேண்டாம். நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த உலகம் உங்களை மதிக்கும். உடனடியாக அதற்கான முயற்சியில் இறங்குங்கள். 

முயற்சி தான் நம்மை முன்னேற்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com