ரோமானிய பேரரசரும் ஸ்டாய்க் தத்துவஞானியுமான மார்க்கஸ் ஆரேலியஸ், இன்றளவு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல விதிகளை விட்டுச் சென்றுள்ளார். வாழ்க்கையில் நல்லொழுக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய அவரது கோட்பாடுகள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான பல புதிய யோசனைகளை நமக்கு வழங்குகிறது. இந்தப் பதிவில் மார்க்கஸ் ஆரேலியஸால் சொல்லப்பட்ட 10 வாழ்க்கை விதிகள் என்னவெனப் பார்க்கலாம்.
சுய விழிப்புணர்வு விதி: உங்களது மனதின் மீது உங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் வெளிப்புற நிகழ்வுகளை உங்களால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
ஏற்றுக்கொள்ளும் விதி: உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தை பொருத்தது. எந்த அளவுக்கு ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்பதிலேயே உங்களுடைய இன்பமும் துன்பமும் அடங்கியுள்ளது.
நிலையற்ற விதி: வாழ்க்கையில் எல்லாமே நிலையற்றது. எனவே இதைப் புரிந்துகொண்டு இந்த தருணத்தை சிறப்பாக மாற்றியமைக்கும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.
நல்லொழுக்க விதி: ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வாதிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் அந்த நல்ல மனிதனாக இருங்கள்.
சுய பிரதிபலிப்பு விதி: உங்களைப் பற்றிய சிந்தனைகளில் நீங்கள் ஆழமாக மூழ்க வேண்டும். இது உங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.
மைண்ட்ஃபுல்னஸ் விதி: உங்கள் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறுதி செயலாக நினைத்து செய்யுங்கள். இது நீங்கள் செய்யும் எல்லா செயலையும் சிறப்பானதாக மாற்ற உதவும்.
பின்னடைவு விதி: நீங்கள் அடையும் தோல்விகளே உங்களை உயர்த்துகிறது. எனவே தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள்.
இரக்கத்தின் விதி: மற்றவர்கள் மீது இரக்கத்தையும் அனுதாபத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் அவர்களுடைய சொந்த வாழ்க்கைப் போரில் போராடுகிறார்கள். எனவே இதைப் புரிந்துகொண்டு யாருடனும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
நம்பகத்தன்மையின் விதி: உங்கள் எண்ணமே வாழ்க்கையாக மாறுகிறது. உங்கள் எண்ணங்களே உங்களின் வாழ்க்கைக்கு சாயமிடுக்கிறது. உங்களது உண்மையான சுயத்தை ஏற்றுக் கொண்டு, எல்லா விஷயங்களிலும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
நன்றியுணர்வின் விதி: நீங்கள் காலையில் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்ற விஷயம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு கிடைத்த விஷயங்களுக்கு நன்றி உணர்வுடன் இருங்கள்.