மார்ட்டின் லூதர் கிங்கின் சிறந்த பொன்மொழிகள்!

Best mottos...
மார்ட்டின் லூதர் கிங்
Published on

ஜெர்மனியில் ஒரு சிறிய கிராமமாகிய துரிங்கியர் என்ற ஊரில் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்தவர்தான் மார்டின் லூதர் கிங். நிறவெறிக்கு எதிராக அறவழியில் போராடியதால் 1964இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

*நம்பிக்கை மிக உறுதியாய் இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.

*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது.

*நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை. முழு படிக்கட்டுகளையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு 

*புத்திசாலித்தனம் மற்றும் நற்பண்பு இதுவே உண்மையான கல்வியின் குறிக்கோள்.

*உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள், ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள், நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள், முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் முக்கியம்.

*இருளை இருளால் விரட்ட முடியாது; ஒளி மட்டுமே அதை செய்ய முடியும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது; அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும்.

*மனச்சோர்வை குணப்படுத்த 10 வழிகள், வெளியே சென்று யாரோ ஒருவருக்கு ஏதாவது உதவி செய்யுங்கள், மீண்டும் அதை ஒன்பது முறை செய்யுங்கள்.

*சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மௌனங்களே என்னை பயமுறுத்துகின்றன.

*சரியான ஒன்றுக்காக துணை நிற்க மறுக்கும் பொழுது ஒரு மனிதன் இறந்து விடுகிறான். நீதிக்கு துணை நிற்க மறுக்கும் பொழுது ஒரு மனிதன் இறந்து விடுகிறான். உண்மைக்கு துணை நிற்க மறுக்கும் பொழுது ஒரு மனிதன் இறந்து விடுகிறான்.

இதையும் படியுங்கள்:
புலம்பலை புறக்கணியுங்கள் வெற்றி கிடைக்கும்!
Best mottos...

*சரியானது எது என்பதை அறிந்தும் அதை செய்யாமல் இருப்பதை விட உலகில் துன்பகரமானது எதுவும் இல்லை.

*உயர்ந்த விஷயங்களை என்னால் செய்ய முடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.

*எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க சிறந்த வழி, அதற்கான காரணத்தை நீக்குவதாகும்.

*சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன் வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்ட வர்களால் கோரப்பட வேண்டும்.

*ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.

*நாம் மன்னிக்கும் திறனை வளர்த்து அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் ஆற்றல் இல்லாதவன் அன்பு செய்யும் ஆற்றல் இல்லாதவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com