
உழைப்பு, சேமிப்பு, சத்தியம் ஆகியவைகள் வெற்றியை கொடுப்பது உறுதியாகும். ஒரு மனிதனின் உழைப்பில் எவ்வளவோ உண்மையான சந்தோஷம் இருக்கிறது. எத்தனை பேர் பசி ஆறுகின்றனர் எத்தனையோ பேரின் வேதனை களையப்படுகிறது, என்பது முக்கியமானதே ஆகும். உழைப்பு என்பது ஒழுங்கையும், பொழுது போக்கையும், புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லது.
உழைப்பிற்கிடையே உதவியும் செய்யலாம். எப்படி தொழில் செய்ய வேண்டும், எப்படி வீட்டில் உள்ளவர் களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தெரிந்தி ருத்தல் அவசியம். உழைப்பில் பொழுதுபோக்கு என்பது குறைவு. எத்தனை உழைத்தாலும் தினமும் இரண்டு மணி நேரம் வீட்டில் எல்லோரும் சேர்ந்து பொழுதை போக்குவது நல்லது. உழைப்பில் பிழைப்புகள் பலவிதம். சிலருடைய உழைப்பு பாதுகாப்பதற்காக இருக்கும். உழைப்பு என்பதில் ஒவ்வொரு செய்கையும் ஆட்டத்திற்கு சமமானது. மறைமுகமான ஆட்டம் என்றே கூறலாம்.
மக்கள் உழைக்க தவறவேண்டாம். உழைக்கும்போது தனிமையாக கவனமாக உழைக்க வேண்டும். உழைக்கும் வேகத்தால் கத்தவோ, கதறவோ செய்யக்கூடாது. நல்வழியினர் உழைப்பு என்பது பலருக்கும் பயன்படுகின்ற நல்ல திட்டங்களுக்கும் பயன்படும். உழைப்பவர்களுக்கு பணம், கல்வி இன்னும் அதிகமாக பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உழைப்புக்கு ஈடானது சுத்தமும், நாணயமுமாகும்.
உழைப்பவர் உலகம் மகிழ்ச்சியாக, நல்லதொரு உலகமாக இருக்கவேண்டு மானால் அவர்கள் உடல் நிலைகளை கவனிக்கத்தெரிதல், ஊட்டச்சத்துக்கள் சாப்பிடத் தெரிதல், குழந்தைகளின் உடல் நிலைத்தெரிதல், குழந்தைகளை பாதுகாத்தல், பயத்தை தவிர்த்தல், அடிபிடிகளை அகற்றி அறிவுரைகளைக் கூறுதல், அறிவை வளர்க்க உதவுதல், சுத்தத்தை பேணுதல், ஆபத்து தெரிதல், அடக்கிக் பேசுதல், கை இறுக்கம் பேச்சிலும், செலவிலும் கடைபிடித்து வாழ்வை ஒரு விளையாட்டாக கொண்டு செல்லல் அவசியமாகும். இதில் உடல் களைப்பைப்போக்கும் மருந்துகளும், நீராடல்கள் போன்றவைகளும் தேவைப்படுவதுண்டு.
ஒரு ஆண் அல்லது பெண் அளவுக்கு அதிகமாக உழைக்கவேண்டும் என்பது கிடையாது.. உழைப்பு என்பது அதிகமாக எட்டு மணி நேரம்தான். பிற நேரங்களில் ஆண்களும், பெண்களும் தனக்கு தேவையான வேலைகளைச் செய்வதோடு சுத்தமாகவும், நோய் இல்லாமலும், சந்தோஷமாகவும் இருப்பதற்குமே ஆகும்.
மக்கள் சிலர் சமையல் வேலைகளை கிண்டல் செய்வதுண்டு. சமையல் வேலை என்பது ஒரு கஷ்டமான, மகிழ்ச்சியான ஒரு கலை. கல்வி கற்றவர்கள் கூட நிசாரமாக பேசிவிடுவதுண்டு. ஆனால் சாப்பிடும் போது அவர்களைப் போல் ருசித்து சாப்பிடுபவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலைகளுக் கெல்லாம் அடிப்படை அடுக்களை வேலைதான்.
இதுதான் உழைப்பின் அஸ்திவாரம் ஆகும். பெண்ணின் சமையல் என்றாலும் தினசரி பிழைப்பு முக்கியமானதாகும். அதற்குரிய வசதியும், ஒவ்வொரு நாட்களையும் சிறப்பாக கழிப்பதும் சாதாரண விஷயமல்ல, பாராட்டுதற்குரிய தாகும்.
கடமைபோல் உழைப்பும், உழைப்பு கைக்குள் இருக்க வேண்டும். அதுதான் வெற்றி என்பது நிச்சயம் என மக்கள் அறிவது நல்லது. உழைப்புக்கு உயர்வு உண்டு, பொழுது போக்கு உண்டு, உண்மையான வாழ்வு உண்டு, மனதுக்கும் சந்தோசம் உண்டு.