அறிஞர்களின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்..!

Meaningful sayings
Motivational articles
Published on

ங்களிடம் ஆலோசனை கேட்க வருபவன், நீங்கள் அவனை புகழ்ந்து பேசவே விரும்புகிறான்.

-செஸ்டர்ஃபீல்ட்

உலகத்திலேயே மிகப்பெரிய மனிதன் யார்? ஒரு வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு, அத்துடன் நிறுத்திக் கொள்ளும் மனோபலம் உள்ளவன்.

-பாலக்

கோபம் என்பது தற்காலிகப் பைத்தியம்.

-ஹொரேஸ்

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக் கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாதிசயமாகும்.

-லெனின்

தவறை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். நேற்றை விட இன்று நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் அது.

- அலெக்ஸாண்டர் போப்

உன்னுடைய பயத்தை உன்னிடமே புதைத்து வைத்துக்கொள். உன்னுடைய தைரியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

-ஸ்டீவன்சன்

பேசும் முன்னால் கவனமாகக்கேள். எழுதும் முன்னால் யோசிக்கத் தவறாதே. செலவழிக்கும் முன்னால் சம்பாதிக்கப்பார். பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப்பார். ஓய்வு பெறும் முன்னால் சேமித்துவை. மரிக்கும் முன்னால் கொடுத்துவிடு.

-ராபர்ட் கார்டு வெல்

உரிய சமயத்தில் கண்டிக்கத் தெரியாதவனுக்கு, மற்றவர்களிடம் கருணை காட்டவும் தெரியாது.

-கார்லைல்

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் விசுவாசமாக வேலை செய்யுங்கள்.வாழ்க்கையில்உயர்ந்து,, முதலாளியாகிய பிறகு ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யலாம்.

-ராபர்ட் ஃபிராஸ்ட்

இயற்கையிலேயே உண்டாகும் பிரச்னை எப்போதும் பிரச்னையாக இருக்காமல், சிலர் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது விடுகிறது.

-எரிக் எரிக்சன்

நமது வருமானங்கள் நமது காணிகளைப் போன்றதே. சிறியதாக இருக்குமானால் நம்மைக் கடிக்கிறது. மிகப் பெரிதாக இருக்குமானால் தடுக்கி வழிச்செய்கிறது. -கால்டன்

கற்க வேண்டும் என்ற ஆர்வ உந்துதலை மாணாக்கர்களிடம் ஏற்படுத்தாமல் போதனை செய்ய முயலும் ஆசிரியர், சூடில்லாத இரும்பை சுத்தியல் கொண்டு அடிப்பவராவார்.

- ஜோர்ஜ் மன்

முதுமையை அடைந்த பிறகே நீ சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததால் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறார்.

- ஜேம்ஸ் சீன்

ஒருவனின் தன்னம்பிக்கையும், சொந்த ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றன.

-பைரன்

இதையும் படியுங்கள்:
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு என்ன தகுதி உள்ளது – சீமான்!
Meaningful sayings

புத்தகங்களோடு வாழ்க்கையும் சேர்த்து படிப்பவன்தான் உண்மையான அறிவாளி.

- லின் யுடவ்

நீங்கள் உங்கள் பையன்களுக்கு ஒரே ஒரு பொருளைத்தான் கொடுக்க முடியும் என்றால்... உற்சாகத்தைத் கொடுங்கள்.

-பாட்டர்ஸன் புருஸ்

உலகம் ஒரு தொட்டில் அல்ல என்பதை, அனுபவத்தை தவிர உனக்கு வேறு எதனாலும் போதிக்க முடியாது. -சிக்மண்ட் ஃபிராய்டு

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கிதான் வாய்ப்புகள் வரும்.

- லூயிஸ் பாய்சர்

ஏழை அடுத்தவேளை உணவைப் பற்றி சிந்திப்பான். சீமான் சென்ற வேளை உணவினால் அவதிப்படுவான்-

-காங்கி

எல்லா குணங்களிலும் சிறந்தது "மெளனம்" இதன் மூலம் பிறர் குறைகளை அறியவும், நம் குறைகளை மறைக்கவும் முடியும்.

- ஜினோ

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com