Monday Motivation - கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறதா?

Person front of door
Monday Motivation
Published on

நம் வாழ்க்கையில் வெற்றிகரமாக ஒரு விஷயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நடந்து முடிந்த தேவையற்ற விஷயங்களை மீண்டும் திரும்பிப் பார்த்தால் என்ன ஆகும்? அது நமக்கு நன்மையா...? தீமையா...? எதையெல்லாம் நாம் செய்யக்கூடாது?

1. ஆறுதல் மண்டலங்களுக்குத் திரும்புவது (Returning to Comfort Zones):

நம் வளர்ச்சி பாதையில் செல்லும்போது எதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை தேவை. எல்லாவற்றையும் எதிர்பார்த்து கொண்டு நம் முன்னேற்றம் இருந்தால் அது நம் ஆற்றலைக் குறைத்து சலிப்பை ஏற்படுத்திவிடும். கடந்த காலங்களில் நாம் செய்த சில ஆதாயம் இல்லாத விஷயங்களை மீண்டும் செய்வது; நம் ஆறுதல் மண்டலங்களுக்கு (Comfort zones) மீண்டும் நம்மை நுழைய வைக்கும். இது நம் வளர்ச்சிக்கு தற்காலிக வேகத்தடையாக அமையலாம்; கொஞ்சம் கொஞ்சமாக நம் லட்சியத்தை மந்தமாக்கும். இதனால் நமக்காக காத்துக் கிடக்கின்ற வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். இறுதியில் ஒரே இடத்தில் தேக்கமடையலாம்.

2. எப்போதும் சுய சந்தேகம் (Revisiting Self-Doubt):

நாம் நம்மை நம்பத் தொடங்கியதும் நம்மைப் பற்றிய சுய சந்தேகத்திற்கு மீண்டும் மீண்டும் நேரம் ஒதுக்குவது, நமது முன்னேற்றத்தைத் தள்ளி போடுவதற்கு சமமாகும்.

இந்த மனக் குழப்பம்தான் நமக்கு தயக்கம், தாமதம், தோல்வி பயத்தை வளர்க்கிறது. காலப்போக்கில் நாம் துணிச்சலாக பல இலக்குகளை அடைவதையும் தவற விட செய்கிறது.

3. தேவையற்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் (Entertaining Toxic Relationships):

வளர்ச்சி பாதையின்போது நமது ஆற்றலைக் குறைக்கும் மக்கள் அல்லது நமது எல்லைகளை மதிக்காதவர்களிடம் இருந்து விலகி இருப்பது மிக முக்கியம். என்னதான் நமக்குக் குற்ற உணர்வு, ஏக்கம் அல்லது தனிமையான நிலை ஏற்பட்டாலும் அத்தகைய நபர்களுடன் மீண்டும் இணைவது உணர்ச்சி ரீதியாக உங்களுக்கு ஆறுதலைத் தரலாம். ஆனால், அதுதான் உங்கள் தெளிவை மறைத்து, கவனத்தைச் சீர்குலைத்து, பெரும்பாலும் மன அழுத்தம் உண்டாக்கும், நம்மைப் பற்றிய குழப்பத்தையும் சேர்த்து அதிகரிக்கிறது.

4. உங்கள் மதிப்பிற்காக காத்திருப்பது (External Validation):

மற்றவர்களிடமிருந்து அதிகமாகப் பாராட்டைத் தேடுவது நீங்கள் உங்கள் மீது வைத்துள்ள உண்மையான மதிப்பை மறக்கச் செய்யலாம். இந்த மதிப்பு முதலில் நன்றாகத் தோன்றலாம். ஆனால், அந்த உணர்வு நீண்ட காலம் உங்களிடம் நீடிக்காது. பாராட்டுகள் நின்றவுடன் உங்கள் தன்னம்பிக்கையும் மங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
மனதிலே குழப்பமா? முடிவெடுப்பதில் தயக்கமா?தெளிவாக வாழ எளிய டிப்ஸ்...
Person front of door

எனவே, எக்காரணத்திற்காகவும் மற்றவர் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதை மறந்துவிட்டு; உங்கள் பயணத்தை நோக்கி கவனம் இருக்கும்போது உங்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும் வர வைத்துக்கொள்ளவும் முடியும்; அதைத் தக்க வைத்துக்கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com