"மூட் அவுட்டா"...? இரண்டு நிமிடங்கள் போதும் உங்கள் மனநிலையை மாற்ற!

Motivation Image
Motivation Imagepixabay.com

னிதர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வப்போது இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நாம் மூட் அவுட் ஆவது சகஜம். அந்த மாதிரி மந்த நிலையிலிருந்து சட்டென்று விடுபட சில விஷயங்களை செய்தால் போதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மந்தமான மனநிலையை மாற்றி நல்ல மூடுக்கு வர இரண்டு நிமிடங்கள் உங்கள் விரல்களுக்கு மசாஜ் செய்தால் போதும் என்பதை இந்தோனேசியா டேயோ  பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மூட் அவுட்டாக உட்கார்ந்து இருக்கும் வேளையில் உங்கள் சிறுவயது போட்டோ ஆல்பத்தையோ அல்லது உங்கள் குழந்தைகளின் ஆல்பத்தையோ இரண்டு நிமிடங்கள் பாருங்கள் உற்சாக மனநிலைக்கு ஒரு சாக்லேட் சாப்பிட்டது  போல மாறுவீர்கள் என்கிறார்கள் இங்கிலாந்து ஓபன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பழைய போட்டோக்களை பார்த்து கிட்டத்தட்ட 11 சதவீதம்  பேர் உற்சாகமாக மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

இனிய நறுமணத்தை இரண்டு நிமிடங்கள் நுகர்வது பலருக்கு நல்ல மன மாற்றத்தை கொண்டு வருவதாக ஆஸ்திரியா நாட்டின் ஆய்வில் கண்டறிந்துளளனர். குறிப்பாக லாவண்டர் நறுமணம் சட்டென்று உங்கள் மூட்டை மாற்றுவதாக   கண்டறிந்துள்ளனர்.

மந்தமான மனநிலையை மாற்றி உங்களுக்கு உற்சாகம் தரும் ஆற்றல் நகைச்சுவைக்கு  உண்டு. எனவே மனநிலையை மாற்ற உங்களுக்கு பிடித்த நகைச்சுவை காட்சிகளை இரண்டு நிமிடங்கள் ஆன்லைன் அல்லது டிவியில் பார்த்து மகிழுங்கள். சட்டென்று உங்கள் மூட் மாறிவிடும்.

மந்தமான மனநிலையில் காய்கறிகளை நறுக்குவது போன்ற சமையல் அறையில் ஏதாவது ஒரு வேலையை செய்து நல்ல மூடுக்கு மாறலாம் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மன இறுக்கமான நேரத்தில் அதைச் சட்டென்று மாற்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை எதிலாவது இரண்டு நிமிடங்கள் எழுதுங்கள். இது உங்கள் மூட் யை மாற்றி மன இறுக்கத்தை சட்டென்று குறைக்கும். மன இறுக்கத்தை சட்டென்று குறைக்கும் ஒரு மருந்து ஒரு குட்டித் தூக்கம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மந்தமான மனநிலையை காலையில் உங்கள் மீது படும் சூரிய ஒளி மாற்றுவதை பலதரப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். எனவே காலையில் இரண்டு நிமிடங்கள் சூரிய ஒளி வீட்டிற்குள் படும் படி ஜன்னல்களை திறந்து வையுங்கள். அல்லது இதமான வெயிலில் வெளியே உடற்பயிற்சியை உற்சாகமாக செய்து மந்தமான மனநிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com