
பொதுவாகவே பலர் நேரம், காலம், பாா்த்து பல காாியங்களை செய்வதுண்டு. அதுபோல நல்ல நேரம், நல்லகாலம் பாா்த்து செய்கிற காாியங்களில் சில தோல்வியிலும் முடிகிறது,
வெற்றியிலும் முடிகிறது.
நல்ல நேரம் பாா்த்துதான் காா் வாங்கினேன். சவாாியே சரிவர அமையவில்லை, நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பாா்த்துதான், முகூா்த்த வேளையில்தான் திருமணம் செய்தோம்.
ஏனோ தொியவில்லை, திருமண வாழ்க்கையில் பிரச்னை மேல் பிரச்னை வருகிறது, நல்ல ஜோசியரிடம் நாள் பாா்த்து, வாஸ்து பாா்த்து, வீடு கட்டினோம் கடனாளி ஆகிவிட்டேன், நேரமே சரியில்லையா என்பது போல பல விஷயங்களில் புாிந்தவர்களும் சரி புாியாதவர்களும் சரி மனதில் தேவையில்லாத கருத்துகளை நாமாகவே திணித்துக்கொள்கிறோம்.
இதுபோன்ற நேரங்களில் நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நிதானமாக நாம் நல்ல நேரம் பாா்த்து செய்த காாியங்களில் எதனால் சிக்கல் வந்தது என்பதை புாிந்து கொள்ளவேண்டும்.
அதோடு எந்த மாதமும் நல்ல மாதம்தான். எந்த நேரமும் நல்ல நேரம்தான். தவறு நம்மிடம்தான் இருக்கிறது. என நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதே நல்லது. இதனில் பின் ஏன் நேரம் சரியில்லை என நாம் அங்கலாய்க்கவேண்டும்.
பொதுவாக நமது எண்ண ஓட்டம் சரியாக இருந்தால், நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால், நல்ல ஒழக்கம் இருந்தால், நோ்மறை ஆற்றல் இருந்தால், தெய்வ சிந்தனை இருந்தால், நாம் ராகு காலத்தில் கூட எந்த காாியத்தையும் துவங்கலாம்.
ஆக, எண்ணங்களும் சிந்தனையையும் நமக்கு உற்ற துணை என்பதை புாிந்து மனிதநேயத்துடன் நாம் மட்டுமல்லாது அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நற்சிந்தனை இருந்தாலே எல்லாமும் நன்றாகவே அமையும், என்பதை நாம் புாிந்து அதன்படி செயல்பட்டால் எல்லா நேரமும் நல்ல நேரமே! அதனால் நமக்கு நன்மையே சேருமே! இந்த தத்துவத்தை புாிந்து வாழ்வதே நல்லது.