
எப்பொழுதும் உண்மையே பேசுங்கள் உண்மைதான் பக்திக்கு வழிகாட்டுகிறது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஆண்டவனை என்னதான் வணங்கினாலும் துதித்தாலும் கருணை இல்லாத யாரையும் இறைவன் சொர்க்கத்தில் நுழைய அனுமதிப்பதில்லை கருணை உள்ளவர்களை கடவுள் நிச்சயமாக நரகத்திற்கு அனுப்புவது இல்லை.
ஒருவரிடம் இல்லாத குணங்களை அவனிடம் இருப்பதாக சொல்லி அவனை புகழாதீர்கள் அப்படி செய்வது அவனை கேலி செய்வது போன்றது ஆகும்.
மனநிம்மதியுடனும் உடல் நலத்துடனும் அன்றைக்கு தேவையான உணவுடனும் காலையில் எழுந்திருப்பவன் உலகத்தையே வென்று விட்டவனை போலாவான்.
நல்ல அறிவானது எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும் அதைத் தேடிச்செல்.
உண்மை பேசுவதே சொர்க்கம் அடைவதற்கான ஏற்ற நல்ல செயல்.
ஒருவனுடைய உழைப்புக்கு அவனுடைய உழைப்பின் வியர்வை உலருவதற்குள் அவனுடைய ஊதியத்தை கொடுத்து விடு.
பணிவும் உபகாரமுமே பக்தியின் குரு காரியங்களாக இருக்கின்றன.
உண்மையான அடக்கமே சகல நற்குணங்களுக்கும் மூல காரணமாக இருக்கின்றது.
நீங்கள் நேரான வழியில் சென்றால் வழியில் உள்ள எவனுடைய தீமையும் உங்களை பாதிக்காது.
உங்கள் பெற்றோருக்கு நல்ல காரியங்களை செய்யுங்கள் அப்படி செய்வீர்களானால் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கும் நல்ல காரியங்களை செய்வார்கள்.
நன்னடத்தை நல்லொழுக்கம் உயர்ந்த குணம் இவற்றை விட சிறந்த எந்த ஒரு தர்மத்தையும் எந்த தகப்பனும் தன் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை.
ஒருவர் தம் பொருளையும் மனமிசைந்து உங்களுக்கு கொடுக்காத வரையில் அதை நீங்கள் பெறுதல் கூடாது.
ஒரே ஒரு நற்செயலை மட்டும் தவறாது ஆற்றினால் போதும் சொர்க்கம் உங்களை தேடி வரும் அந்த செயல்தான் உண்மை பேசுதல்.
பொருட்களை நிறைய சேமித்து வைத்தல் செல்வம் அன்று நிறைந்த உள்ளத்தோடு இருப்பதே மேலான செல்வம்.
மனிதன் இறந்த பிறகும் எஞ்சி நிற்பவை மூன்று அவையே அவனது கல்வி அவன் செய்த தர்மம் அவனுக்காக பிறர் செய்த பிரார்த்தனை.