தோல்வியைத் துரத்தி அடிக்கும் 3 யுக்திகள்!

motivaton image
motivaton imageImage credit - pixabay.com

தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை உணர வேண்டும். வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற பாடலை முணுமுணுக்கலாம் தவறில்லை. ஏதோ ஒருவர் குருட்டாம் போக்கில் ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால் அதுவே நிரந்தர சாதனையாகிவிடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்தப் பாடல் வரிகள். எந்த ஒரு வெற்றியாளரும் தோல்வியை சந்திக்காமல் இருக்கவே முடியாது. அப்படி தோல்வி அடையும்போது எப்படி எழுந்து நிற்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்! 

பரிட்சையில் தோல்வி போட்டிகளில் தோல்வி திருமணத்தில் தோல்வி என்று எதில் தோல்வியுற்றாலும் மனித மனம் விரும்புவது தனிமையைத்தான். தனிமையில் இனிமை காணமுடியாது என்றாலும், ஆழ்ந்து சிந்திக்கும் மனது தேர்ந்தெடுப்பது தனிமையைத்தான். தோல்வியடையும் பொழுதுதான் உங்களுக்கு ஆதரவை வழங்கக்கூடிய நபர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க நினைக்க வேண்டும். தனிமைப்படுத்தல் உங்கள் உணர்வுகளை எதிர்மறை வழியில் மட்டுமே பெருக்கக்கூடும்.

அதனால் விபரீதமான முடிவுகளை எடுத்து விடுவீர்கள் என்பதை உணர்ந்துதான் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து நீங்கள் விலக ஆசைப்பட்டாலும், அவர்கள் உங்களை தனிமையில் விடாதபடிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதை அவ்வப்பொழுது நோட்டம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது   உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். தோல்வி மனப்பான்மை மெல்ல மறைந்து இதிலிருந்து எப்படி வீறு கொண்டு எழுவது என்ற உந்து சக்தி பிறக்கும். பிறகு எல்லோரிடமும் மனம் விட்டு பேசிப்பழக ஆரம்பிப்பீர்கள்.  அந்த அன்பு உங்களை ஆக்கபூர்வமான வேலையைச் செய்யத் தூண்டும். அதுவே உங்களை வெற்றிப்பாதைக்கு இழுத்துச் செல்லும் நல்வழியாக மாற்றிவிடும். ஆதலால் தனிமையை தவிர்ப்பீர்களாக! இணைந்திருக்க விரும்புவீர்களாக!

அழுத்தம் கொடுக்க அனுமதிக்காதீர்கள்:

சிலர் அப்பொழுதே ஒழுங்காக படித்திருந்தால் தேர்வில் வெற்றி பெற்றிருக்கலாம். அதை விட்டு விளையாடியதால் தான் இதுபோல் தோல்வியடைந்துவிட்டாய். இனிமேலாவது உருப்படுகிற வழியைப் பார் என்று அழுத்தம் கொடுப்பவர்கள் இருக்கவே செய்வார்கள். அவர்களின் பேச்சை அப்படியே ஏற்றுக் கொண்டு வருந்த வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக என்ன செய்தால் முன்னேறலாம் என்பதை நடைமுறைப்படுத்த துணியவேண்டும். அந்தத் துணிச்சலே தோல்வி தன்மையைப் போக்கும் அருமருந்தாகிவிடும். பிறகு மற்றவர்கள் உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வார்த்தைகள்

பேசுவதை நிறுத்தி விடுவார்கள். பிறகு நீங்கள் எந்த செயலை செய்ய நினைத்தாலும் தடுமாறாமல் செய்யலாம். அதற்கு அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாமல் இருக்கும் வழியைத் தேட வேண்டும். அதுதான் தோல்வியை விரட்டும் துணிவு. 

இதையும் படியுங்கள்:
பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?
motivaton image

நம்பிக்கையான நலம் விரும்பிகளிடம் பேசுங்கள்

எந்த விதமான தோல்வியாக இருந்தாலும்  மனதிற்குள்ளே பூட்டி வைத்து குமைவதை விட, அதை நேர்மறையாக, அனுபவப்பூர்வமாக, நம்பிக்கையாக, சரியான முறையில் வழிகாட்டி உதவக்கூடியவர்களிடம் கூறி, அந்த நலம் விரும்பிகளின் ஆக்கபூர்வமான வழிகளை பின்பற்ற ஆரம்பிக்கலாம். இதனால் வாழ்க்கையில் திருமணத்தில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து விடுபடலாம். மனசும் லேசாகிவிடும். பிறகு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம். மனசும் உறுத்தாது. பிறகு தெளிந்த மனதுடன் எதைத் தொட்டாலும் துலங்கும். தோல்விகள் துவண்டு ஓடும். இப்பொழுது நினைத்து எதிலும் வெற்றியைப் பெறமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com