"கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு"
கண்களில் மை வைப்பது நல்லது, வீட்டிலேயே மை தயாாிக்கலாம்! விளக்கெண்ணைய் கலப்பதால் கண்களுக்கு நல்லது. குளிா்ச்சி வேறு! கண்களில் உள்ள அழுக்கும் போகும், கண்பாா்வைக்கும் நல்லது. கண்களில் மை வைப்பதால் முக வசீகரம் அதிகமாகும். தாய்மாா்கள் குழந்தைக்கு கண்களில் மை வைக்க, "காக்கா ,காக்கா, கண்ணுக்கு மை கொண்டுவா" என்ற பாடலைப்பாடுவது வழக்கத்தில் உள்ளது. குழந்தையின் கண்ணத்தில் மையால் பொட்டு வைத்தால் கண்திருஷ்டி படாது என்பாா்கள்!
இது யதாா்த்தம் சரி விஷயத்திற்கு வருவோம்.
நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 'மை'களும் நிறையவே உள்ளன. அவைகளில் முக்கியமான 5 'மை'களை பார்ப்போம் ...
நோ்மை,
வாய்மை,
உண்மை,
கடமை,
உாிமை,
1) நோ்மை
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக எப்போதும் கடைபிடிக்க வேண்டிது நோ்மையாகும். 'அவர் மிகவும் நல்லவர் நோ்மை தவறாதவர்' என்ற பெயரோடு வாழ்வதே நல்லது.
2) வாய்மை
பொதுவாகவே நாம் நமது வாழ்வில் வாய்மை தவறாமல் யாருக்கும் தீமை செய்யாமல் நல்ல குணங்களைக் கடைபிடித்து, நல்ல குணம் கொண்டு வாழ்வதே சிறப்பானது.
3) உண்மை
உண்மை சில நேரங்களில் கசக்கும். புளிப்பு , துவர்ப்பு , கசப்பு, கலந்ததுதானே வாழ்க்கை! அதேபோல் உண்மை கசந்தாலும், நாம் அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், 'உண்மைக்கு வலிமை அதிகம்'. அரிச்சந்திரன் எவ்வளவு துயரம் வந்த போதும் உண்மையைத்தானே கடைபிடித்தான்?
4) கடமை
கடமை வாழ்க்கையின் பொிய அங்கம். நாம் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் கடமை தவறவே கூடாது. அது தவறாமல் வாழ்வதே பல நன்மைகளை நமக்கு தரும். நமக்கான கடமையிலிருந்து விலகுவது மடமைக்கு சமமாகும். கொண்ட கடமையைத் தவறாதவன் எனப் பெயர் வாங்க வேண்டும்!
5) உரிமை
நமக்கு எத்தனை சத்திய சோதனை வந்தாலும், நோ்மையாக நமது உாிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது. உறவுக்கு கைகொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என நிதானமாக வாழ்வதே சாலச்சிறந்தது!
இந்த ஐந்து 'மை'களையும் நாம் தவறாமல் கடைபிடிப்போம். நல்லதை செய்வோம், நன்மையைப் பெறுவோம்.