அசர வைத்த நிகழ்வு..!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

ந்த பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரி கண்டிப்பாக கூறிவிட்டார் தன்னுடன் வகுப்பு அறைக்கு யாரும் வரவேண்டாம், குறிப்பாக தலைமை ஆசிரியர், என்று.

அன்று அந்த பள்ளியில் இன்ஸ்பெக்க்ஷன்.
முதலில் சென்றது 5 ஆம் வகுப்பு C செக்க்ஷன்.

இவர் உள்ளே நுழைந்ததும் எல்லா மாணவ, மாணவிகள், வகுப்பு டீச்சர் உட்பட இவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர்.

அவரும் வணக்கம் கூறிவிட்டு, டீச்சரிடம் கேள்விகள் கேளுங்கள் என்றார்.
அவரும் பாடங்களில் கேள்விகள் கேட்க மாணவ, மாணவியர் அழகாக பதில் கூறினார்கள்.

மகிழ்ந்த அந்த கல்வி அதிகாரி வகுப்பு டீச்சர், மற்ற டீச்சர்கள், மாணவ, மாணவியர்களை மனதார பாராட்டினார். எல்லோருக்கும் மிக்க மிக்க மகிழ்ச்சி. பெரிய ரீலிப் முகங்களில் தெரிந்தது.

அவர் அடுத்த வகுப்பிற்கு செல்லப் போகிறார் என்று எதிர் பார்க்கும் தருணத்தில் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

அந்த அதிகாரி, நான்..! என்று கூறி நிறுத்திவிட்டு எல்லோரையும் மவுனமாக ஒரு பார்வை பார்த்தார்.

திக்கென்றது வகுப்பு டீச்சருக்கு. இவர் கேட்கும் கேள்விக்கு பதில் மாணவர், மாணவியர் கூறாவிட்டால் என்ற கவலை வந்தது.

நான்..! என்று மறுபடியும் தொடர்ந்த அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கேள்விகள் எதுவும் கேட்கப் போவதில்லை என்று முடித்தார். முகங்கள் பிரகாசம் ஆயிற்று.

ஆனால், என்று கூறி நிறுத்தி விட்டு சொன்னது வகுப்பு டீச்சருக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவர் கூறினார், "எனக்கு பதிலாக யாராவது ஒரு ஸ்டுடென்ட் என்னிடம் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாவிட்டால், என்னுடைய இந்த பேனாவை பரிசு அளிப்பேன்" என்றார்.

அவர் அப்படி கூறியதும் ஒரு பையன் எழுந்து ஒரு கேள்வி கேட்டான். அந்த பையனுக்கு பேனாவை பரிசு அளித்து பாராட்டி விட்டு போனார், அந்த அதிகாரி.

இதையும் படியுங்கள்:
அரிஸ்டாட்டில் எனும் நடமாடும் பல்கலைக்கழகம் பகிர்ந்த பொன்மொழிகள்!
motivation articles

அடுத்த வகுப்பிற்கு போவதற்கு முன்பு கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்ட அவர் தனக்குள் கூறி கொண்டார். 'இந்த காலத்து பள்ளி மாணவர், மாணவியர்கள் ஷார்ப்பாக உள்ளார்கள்' என்று.

அது சரி, அந்த பையன் கேட்ட கேள்விதான் என்ன..?

"சார்..! உங்கள் கொள்ளு தாத்தாவின் அப்பாவின் கொள்ளு தாத்தா பெயர் என்ன..?"

இந்த நிகழ்வு எடுத்து காட்டுவது

பிறரின் திறமைகளை எப்பொழுதும், எந்த சூழ்நிலையயிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

நன்கு கல்வி கற்று, உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் அறியாதது பிறர் அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

வயது வித்தியாசமில்லாமல் பிறருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com