அகத்தினுள் வரும் அதிருப்தி தருமே முன்னேற்றம்!

SWAMI BRAHMANANDA...
SWAMI BRAHMANANDA...

“Onward, onward! Never be satisfied
with your present state of mind. Try to create within yourself a burning dissatisfaction. Say to yourself, "What progress am I making Not a bit."

"முன்னேறுங்கள், முன்னேறுங்கள்! இப்போதிருக்கும் மன நிலையிலேயே திருப்தி அடைந்து விடாதீர்கள். உங்களின் அகத்தே ஒரு அதிருப்தியை ஏற்படுத்த முற்படுங்கள். “என்ன முன்னேற்றம் நான் அடைகிறேன்? சிறிது கூட இல்லை." என உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள்.” -SWAMI BRAHMANANDA.

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் முதல் தலைவரான சுவாமி பிரம்மானந்தா கூறிய எளிமையான எல்லோரும் கடைபிடிக்க கூடிய வெற்றிக்கான சூத்திரம் இதுதான்.

ரோஹித்தின் வெற்றிக் கதையைப் பார்ப்போம். ரோஹித் பிறக்கும்போது சுறுசுறுப்பான குழந்தையாகத்தான் பிறந்தார்.  படிப்பிலும் அறிவிலும் கெட்டிக்காரரான ரோஹித் தனது 15 வயதில் வந்த மூளைக்காய்ச்சலுக்கு எடுத்த தவறான சிகிச்சை காரணமாக பார்வைகளை முற்றிலும் இழந்தார்.  சிறு வயதிலிருந்தே சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக இருந்ததால் இந்தக் குறைபாடு தனது வெற்றியைத் தடுக்கும் ஆற்றல் என அஞ்சவில்லை.

அவர் பொறியியலில் சாதிக்க விரும்பி அதற்கான கல்வியைத் தேர்ந்தெடுத்தார். அதில் வடிவமைப்பு வரைபடங்கள், நடைமுறைகள், ஆய்வக வேலைகள் போன்றவை அடங்கியதால் அது அவருக்கு சரியான பாடமா என்று குடும்பத்தினர் மற்றும் சிலர் கேள்விகளை எழுப்பினர். ஆனால் ரோஹித் அவற்றைக் காதில் வாங்காமல் அதை சவாலாக எடுத்துக்கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். அத்துடன் போதும் ஏதாவது வேலை கிடைத்தால் பார் என்ற தடை மீண்டும். அவர் திருப்தி அடையவில்லை.

மேலும் ஐடி துறையில் ஆய்வு செய்ய முடிவு செய்து விடாமல் மென்பொருள் மேம்பாட்டில் பயிற்சி பெற்றார் மற்றும் ஒரு சிறந்த MNC இல் பணிக்குச் சேர்ந்து தற்போது வரை மேலும் மேலும் அத்துறை சார்ந்த விஷயங்களை அறிந்து தன்னை நாடி வரும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார்.

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
SWAMI BRAHMANANDA...

அவரைப் பற்றி கேள்விப்பட்டு பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளரிடம் அவர் கூறிய செய்தி "புறத்தில் உள்ள என் குறைபாடுகள் அதிருப்தி தருவது போல் அனைவரும் எண்ணுகிறீர்கள். உண்மையில் என் அகத்தில் எனது வெற்றி குறித்த அதிருப்திதான் எனது செயலை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளது " ரோஹித்தின் இந்த வார்த்தைகள் எண்ணற்ற இளைஞர்களின் வேதவாக்காக மாறியதை சொல்லவும் வேண்டுமோ?

இவர் ஒரு சான்று மட்டுமே. நம்மிடையே வாழும் வெற்றியாளர்களை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவர்கள் பெறும் எந்த வெற்றிக்கும் திருப்தியுடன் மகிழ மாட்டார்கள். நான் இன்னும் செல்ல வேண்டிய இலக்கு அதிகமுள்ளது என்பார்கள். இவர்களின் அதிருப்தி கண்டு ஆச்சரியம் அடையாமல் நாமும் இவர்களைப்போல் அகத்தில் அதிருப்தியுடன் இது போதாது எனும் எண்ணத்துடன் வெற்றியை நோக்கி நடைபோடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com