வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை தருகின்ற ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் ரசித்து அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வில் நேர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை ரசித்து வாழ ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. சோர்வாக உணரும் பொழுது அல்லது மன அழுத்தம் மிகுந்திருக்கும் பொழுது ஓய்வெடுப்பது மிகவும் அவசியம். வாழ்வில் காணும் சின்ன சின்ன வெற்றிகளைக் கூட கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள். 

அதேபோல் நம் தனிப்பட்ட வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டுவது அவசியம். நமக்கென்று கொஞ்ச நேரத்தை ஒதுக்க தெரிந்திருக்க வேண்டும். பிடித்த புத்தகங்களை படிப்பது, காலாற நடப்பது, வார இறுதியில் சிறு பயணத்தை மேற்கொள்வது போன்றவை வாழ்க்கையில் ரசிப்பு தன்மையை கூட்டும்.

நம் அன்புக்கும் பாசத்திற்கும்  உரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது வாழ்வில் ரசிப்புத் தன்மையை அதிகரிக்கும்.

நம் மகிழ்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் சமூகமும், அதனுடனான தொடர்பும் அவசியம். எனவே புது புது நபர்களை சந்தித்து பேசுவது வாழ்வில் ஆர்வத்தை உண்டு பண்ணும். சமூக ஊடகங்களை குறைவான அளவு பயன்படுத்தி மனிதர்களுடன் பேசிப் பழக நிறைய நேரம் ஒதுக்குவது வாழ்வில் ரசிப்புத் தன்மையை கூட்டச் செய்யும்.

புது விஷயங்களை முயற்சிப்பதும், புதிய இடங்களை ஆராய்வதும் நம் புலன்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும். நம்முடைய பார்வையையும் விரிவுபடுத்தும். சுத்தமான மற்றும் நேர்த்தியான இடங்கள் நம்மை நிதானமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சி யாகவும் உணர வைக்கும். எனவே தேவையற்ற பொருட்களை சேர்க்காமல் வீட்டை ஒரு கோடவுன்போல் ஆக்காமல் சுத்தமாக நேர்த்தியான முறையில் பராமரிக்க வாழ்வை ரசிக்கத் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
நிதியை கையாளும் வழிமுறைகள்!
motivation article

ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்வில் எதையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க முடியும். அதற்கு தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி மற்றும் தியானம் பழகுவது நல்லது.

இயற்கையோடு இணைந்து வாழ்வது வாழ்வில் ரசிப்பு தன்மையை கூட்டும். இயற்கையில் நேரத்தை செலவிடுவது ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வது வாழ்க்கையில் சுவாரசியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். வாழ்க்கையை அமைதியாக ரசிக்க கற்றுக் கொண்டாலே போதும் ஆனந்தமாக எந்தக் குறையும் இன்றி 

வாழலாம். சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு வகை தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால்தான் மற்றவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியும். எனவே மகிழ்ந்து மகிழ்விப்போம்.

என்ன நான் சொல்வது சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com