விஞ்ஞானமும் மெய்ஞானமும்..!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

டை வீரர்கள் நடந்து செல்லும்போது தாளம் மாறாமல் லெஃட் ரைட் என கால்களைப் பூமியில்  உதைத்தபடி நடப்பார்கள். ஆறுகளுக்கிடையேயான பாலங்கள் மீது நடக்கும்போது ராணுவ நியதிக்கு மாறாக ஒலி ஒழுங்கில்  நடக்கும்படி உத்தரவு பிறக்கும்  அந்தப் பாலம் அவர்கள் எடையைக் தாங்க வல்லது என்றாலும் தாள ஒலியின் மூலம் முறிந்துபோக வாய்ப்புண்டு.

 அவர்கள் நடையில் எழும் தாக்கமும்  பாலத்தின் அதிர்வலையும் இணையும்போது பாலம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. Resonance என்ற எதிர் ஒலி அதிர்வே இவ்விளைவை ஏற்படுத்துகிறது. வேத மந்திரங்கள் இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் பலவித விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. ஐம்பூதங்களும் ஐந்து ஒலி வகைகளால் கட்டப்படுகின்றன. ஓம் என்ற ஒலி ஒலிக்க ஒலிக்க தூய்மையும் தெய்வீகமும் உண்டாகிறது.

பரமஹம்ச யோகானந்தா என்பவர் ஓம் என்ற ஒலியை உள்வாங்குவதன் மூலம் நம் உடலில் உள்ள பல நோய்கள் வலிகளிலிருந்து விடுதலை பெறமுடியும் என நீரூபித்தார். ஒலி மருத்துவம் என்ற கட்டுரையில் சைமன் ஹிதரீ என்ற ஆய்வாளர் உலகில் பல மதத்தவரும் ஒலியின் மூலம் நோயை வெல்ல முடிவதை பதிவு செய்துள்ளார். பக்கவாதம் மூட்டுவலி ஆகியவற்றைக் கிரேக்கர்கள் இசை மூலம் மாற்ற முயன்றுள்ளனர். அலெக்சாண்டர் மனச்சிதைவுற்றபோது லோயர் என்ற இசைக்கருவி அவரை சரி செய்ததாக தகவல்கள் உள்ளன.

இன்றைய நவீன உலகம் ஒலி அலைகளைப் பயன்படுத்தி சிறுநீரகக் கற்களை வெளியேற்றுகிறது. நமது உறுப்பு எலும்பு எல்லாமே எதிர் அதிர்வலை எழுப்பும் ஆற்றல் உள்ளவை. அதனால் வேத கோஷம் மங்கள இசை கோவில்களில் முழங்கும்போது உடல் எல்லையற்ற நலனைப் பெறமுடியும்.

இதையும் படியுங்கள்:
அதிசயம் ஆனால் உண்மை... இதுவும் பெரிய சாதனை!
motivation article

18 ம் நூற்றாண்டில் Earnest chaldnin என்ற ஜெர்மன் ஆய்வாளர் வயலின் ஒலிகளில் ஒரு தட்டில் சூழப்பட்ட மணல் ஜியோமிதி வடிவம் பெற்றதாகக் கூறுகிறார். தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாக பாரிசில் ஒரு உண்மை வெளியிடப்பட்டது. ஆரோக்கியமானவர்களின் உடலில் இசைக்கருவிகளின் ஒலி அதிர்வுகள் ஹீமோக்ளோபின்  அளவைக் கூட்டுகிறது என்பதும், புற்றுநோய் செல்கள் அதிர்வுகள் தாங்காமல் உருக்குலைந்து விடுகிறது என்பதும் நிருபிக்கப்பட்டது.

 எல்லா இசைக்கருவிகளை விட அதிக ஆற்றல் கொண்டது மனிதனது குரல் என்பதை Fabien maman என்பவர் நிரூபித்தார். மனித குரலில் கூடுதல்  பலத்திற்கும் காரணம் அதன் நோயை குணப்படுத்தும் பலமிக்கது என்பதையும் நிரூபித்தார். இப்படிக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும்  கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் குடைந்தெடுத்த ரகசியங்களை நம் முனிவர்கள் ரிஷிகள் எளிமையாய் வெளிப்படுத்தினர். ம்ருத்யுஞ்சய மந்த்ரம் போன்ற மந்திரங்கள் நோய்களை சரிசெய்யும் என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். கோவில் மணி கூட ஓம் காரத்தை உண்டு பண்ணி பலருக்கும் பயன்பாட்டை  பரப்பிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இரண்டையும் இணைத்து நாம் பயனோடு வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com