புல்லின் நிறம் நீலமா? பச்சையா?

புல்லின் நிறம்...
புல்லின் நிறம்...medium.com

ரு கழுதையும், புலியும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தன. வழியில் பச்சைப் பசேல் என்று புல் வெளியைப் பார்த்த கழுதை, “ஆஹா, நீல நிறத்தில் இந்தப் புல்வெளி எத்தனை அழகாக இருக்கிறது” என்றது. அதிர்ச்சியடைந்த புலி, “என்ன உளறுகிறாய்?, பச்சை நிறத்திலிருக்கும் புல்லைப் பார்த்து நீலம் என்று சொல்கிறாயே” என்று கேட்டது.

“உளறுவது நீயா அல்லது நானா? புல் நீல நிறம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றது கழுதை. புலி, கழுதைக்கிடையே, வாக்குவாதம் தடிக்க, இரண்டும் காட்டின் ராஜா சிங்கத்திடம் சென்று தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதென முடிவு செய்தன. சிங்கத்தின் சிம்மாசனத்தை அடைந்த கழுதை பெருத்த குரலில், “அரசே, புல்லின் நிறம் நீலம் என்பதுதானே சரி” என்று கேட்டது.

“உன் மனதிற்கு புல் நீல நிறமாகத் தோன்றினால், அது நீல நிறம்தான்” என்றது சிங்கம்.

“சிங்கராஜா, புல் நீல நிறம் என்பதை புலி ஒத்துக்கொள்ள மறுக்கிறது. புல்லின் நிறம் பச்சை என்று தேவையற்ற வாதம் செய்கிறது. உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிற புலிக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது.

“புலி காட்டை மூன்று முறை சுற்றி வர வேண்டும்” என்று சிங்க ராஜா கட்டளையிட, கழுதை மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றது.

புலி, சிங்க ராஜாவிடம், “அரசே, உங்களுக்குத் தெரியும் புல் பச்சை நிறம் என்று. நான் சொன்னதுதான் சரியென்றும் தெரியும். அப்படியிருந்தும் தவறு செய்யாத எனக்கு எதற்கு தண்டனை” என்று கேட்டது.

சிங்கம் சொல்லியது. :”நீ புத்திசாலியான மிருகம். உனக்கு நன்றாகத் தெரியும் புல்லின் நிறம் பச்சை என்று. அப்படித் தெரிந்தும் உன்னைவிட அறிவில் குறைந்த கழுதையுடன் வாதம் செய்தாய். அதுவுமில்லாமல், இந்த கழுதையுடன் அரச சபைக்கு மத்தியஸ்தம் செய்துகொள்ள வந்த காரணத்தால், இந்த சபையின் நேரத்தையும் வீணடித்தாய். அதற்காகத்தான் இந்த தண்டனை.”

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிடைத்தற்கரிய 10 உலர் பழங்கள்!
புல்லின் நிறம்...

இந்த கதையால் கிடைக்கும் நீதி என்ன?

நம்முடைய வாழ்க்கையில் பல அறிவாளிகள், தங்களுடைய பொன்னான நேரத்தை, தங்களைவிட அறிவு குறைந்தவர்களிடமும், “தான் சொல்வதுதான் சரி” என்று நம்புகின்ற தான்தோன்றி மனிதர்களிடமும் தேவையற்ற வாதம் செய்து,வீணடிக்கிறார்கள்.

அறிவாளியுடன் செய்கின்ற வாதம், நம்முடைய கருத்தில் தெளிவு பிறக்க உதவும். நம் சிந்தனைகளை உயர்த்தும். ஆனால், “எனக்கு எல்லாம் தெரியும், நானே அறிவாளி” என்று நம்புபவன் செய்வது வாதமல்ல; அது வரட்டுப் பிடிவாதம். இவர்களுடன் வாதமிட்டு நம் நேரத்தையும் நம் சக்தியையும் வீணடிப்பது அறிவற்ற செயலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com