
நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு அடிப்படையில் முதலில் தேவைப்படுவது என்ன தெரியுமா? நம்பிக்கை மட்டுமே. எந்த காரியம் தொடங்கினாலும் சரி முதலில் நாம் அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் சரி அது நிச்சயம் நமக்கு வெற்றியை தராது.
நீங்கள் ஒரு விஷயம் செய்யப் போகிறீர்கள் என்றால் அது நம்மால் முடியாது என்பது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் முடியும் என்று ஒரு நம்பிக்கை வைத்து அந்த காரியத்தை செய்து பாருங்களேன். நீங்களே ஆச்சரியப்படும் அளவு நானே நம்பிக்கை படவில்லை. இது முடியும் என்று கூறும் அளவுக்கு அந்த காரியம் சக்சஸ் ஆக முடிந்திருக்கும்.
தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஹேவெர்ட்ஹில் ஒரு சமயம் கலிபோர்னியாவிற்கு சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். சிறப்பு அழைப்பாளரான ஹேவெர்ட் அதில் தன்னுடைய "எதுவும் விற்பனையாகும்" என்ற புத்தகம் பற்றி நீண்ட சொற்பொழிவு தந்தபோது சிலர் நக்கலாகக் கூடச் சிரித்தார்கள்.
கூட்டம் முடிந்ததும் ஹேவெர்ட் ஹில்லைச் சந்தித்தார் ஒரு மனிதர். அவர் தன்னை ஒரு கவிஞர் என்று அறிமுகப் படுத்தினார். பின்பு ஹேவெர்ட் ஹில்லிடம் 'நான் இந்தக் கலிபோர்னியாவில் பாரம்பரியக் கவிஞனாக வர ஆசைப்படுகின்றேன், அது நடக்குமா?" என்று கேட்டார்.
ஹேவெர்ட் அவரிடம் "நீங்கள் பாரம்பரியக் கவிஞராகத் தேர்வு செய்யப்பட வேண்டிய தகுதியும், திறமையும் உங்களிடம் உள்ளது என்று நம்பினால், அதனை நிரூபித்தால் நிச்சயம் நடக்கும்" என்று கூறினார். அந்த மனிதர் "என்னிடம் அந்தத் திறமைகள் உள்ளது" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஐந்து ஆண்டுகள் கழித்து ஹேவெர்ட் ஹில்லுக்கு ஒரு கடிதம் வந்தது. அவரிடம் முன்பு பேசிய அந்தக் கவிஞர் கலிபோர்னியாவின் பாரம்பரிய கவிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதே அக்கடிதத்தின் முக்கியச் செய்தி. நம்பிக்கையும், செயலும் அவருக்கு விரும்பியதைக் கொடுத்தது.
நம்பிக்கையிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்று கூறும் வார்த்தைகள் பொய்யான வார்த்தைகள் இல்லை. கூர்ந்து நோக்கினால் எண்ணற்ற மனிதர்கள் எல்லாம் இந்த நம்பிக்கையால் தான் உருவாயினர் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
"உழைப்பு, சுறுசுறுப்பானது வசதிகளையும் நன் மதிப்பினையும் கொண்டு வந்து தருகின்றது."