

எதிர்பார்த்தபடி, எதிர்பார்க்கும் வண்ணம் எப்பொழுதும், எல்லா இடங்களிலும் நடைபெரும் என்று கூறமுடியாது. முன்னேறிச் செல்லும்பொழுது உதவிகளும், முன்கூட்டியே திட்டமிட்டபடியும் நடக்க வாய்ப்புக்கள் அதிகம்.
அதே சமயத்தில் எதிர்பார்க்காத தடங்கல் சந்தர்ப் பங்களையும், நிகழ்வுகளையும் சந்திக்க நேர்வதை தவிர்க்க முடியாது.
இவ்வகை நடவடிக்கைகள் தடங்கல் ரூபத்தில் முன்னேற்றத்திற்கு தடையாக மாறக்கூடும். அவற்றை எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நேரம் கடத்தினால் முன்னேறுவதற்கான வாய்ப்பை நழுவவிட நேரும்.
அது மட்டும் அல்லாமல், இந்தத் தடையால் ஏற்படும் தொய்வு அல்லது பின்னடைவு போட்டியாளர்களுக்கு சாதகமாகவும் அதே சமயம் லாபகரமாக முடியவும் சாத்தியம் ஆகக்கூடும்.
தடையோ அல்லது தடங்கலோ சந்திக்க நேர்ந்தால் நம்பிக்கை, தைரியத்தை இழக்ககூடாது. பயப்படாமலும், மனம் தளராமலும் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்தவேண்டும்.
எந்த வகை சலனங்கள், தொந்தரவுகளுக்கும் இடம் கொடுக்காமல் முழு ஈடுபாட்டுடன் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் இறங்கி வேலை செய்ய வேண்டிய முக்கிய தருணம், கட்டம் இதுவாகும்.
உரிய நடவடிகைகள் இந்த முக்கிய கட்டத்தில் உரிய அளவு செயல்படுத்த தவறினால் தடங்கல்கள் அல்லது தடைகளின் வீரியம் அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாமல் சூழ்நிலை கை விட்டு எல்லை மீறி சென்று இழப்பு அதிகமாகிவிடுவதுடன் தொடர்ந்து செயல்படுவது எந்த வகை நன்மையும் பயக்காது என்ற நிலைமைக்கும் போய் விடக்கூடும்.
எனவே தடங்கல் அல்லது தடையை எதிர்கொள்ளும் முன்னேறி செல்ல நடவடிக்கை எடுக்கும் நபரின் தலையாய கடமை தடங்கல், தடையை தகர்த்து எறிவது.
விடாப்பிடியாக அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை கையில் எடுத்து செய்யவேண்டிய பணிகளை செவ்வனே செய்தால் , தடைகள் தகர்த்து எறிய உரிய வழி கிட்டுவதுடன், முறைகளும் புலப்படும். முன்னேற சாத்தியமும் ஆகும். இந்த வேகமாக செயல்படும் உலகில் நிரந்தரமற்றவைகளில் இத்தகைய எதிர்கொள்ளும் தடங்கல்கள், தடைகளும் அடங்குவதால் அவைகளும் மறைந்துவிடும்.
எனவே நடந்தவற்றை பற்றி அனவசியமான கவலை கொள்ளாமல், நடப்பவைகளுக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து உரிய பலன்களை அனுபவிக்கலாம்.