சிறகடித்து பறக்கும் பறவையாய் சின்னச் சின்ன சந்தோஷங்கள்..!

Little joys like a bird flying with its wings.
motivational articles
Published on

னுபவிக்க சின்ன சின்ன சந்தோஷங்கள் எத்தனை எத்தனை…  மகிழ்ச்சியாக இருக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

பள்ளியில் படிக்கும் காலத்தில் சந்தோஷம் என்றால் விடுமுறை நாட்கள்தான். அதுவும் annual பரீட்சை முடியும் நாள் அன்று ஆஹா இரண்டு மாதம் ஸ்கூல் பக்கம் வர வேண்டாம் என்று நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி… 

பள்ளிக்கு செல்லும் நாட்களில் லஞ்ச் க்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது பாட்டி தரும் ஜவ்வு மிட்டாய் தரும் சந்தோஷம் அடடா… கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாயில் கரையும் நெய் சொட்டும் மைசூர் பாக் தோற்றுவிடும் ஜவ்வு மிட்டாய் சுவையில்.

முதல் ரேங்க் வாங்கும்போது  " very good keep it up" என்று டீச்சர் சொல்லும்போது கிடைக்கும் அளவிலா ஆனந்தம்.. டீச்சர் லீவ் எடுத்திருந்தால் அந்த கிளாஸை அட்ஜஸ்ட் பண்ணி மற்ற கிளாஸை நடத்தி "go home" என்று எப்போது கையில் ரிஜிஸ்டர் எடுத்து ஸ்கூல் ப்யூன் வருவார் என்று எதிர்பார்த்து டீச்சர் லீவ் எடுத்திருந்தால் கிடைப்பதில் ஒரு சந்தோஷம்.

சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டு தெரிந்தவர் சைக்கிளை வாங்கி கீழே விழுந்து முழங்கால் சிராய்த்து ஒரு வழியாக சைக்கிள் ஓட்ட கற்று கொண்டதில் சின்ன சந்தோஷம்‌. அப்புறம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியது. பிறகு சைக்கிள் பேலன்ஸ் இருந்தால் TVS 50ஓட்ட முடியும் என்பதை தெரிந்து அப்பாவின் வண்டியை முதல் முறை ஓட்டும்போது அப்பப்பா… ப்ளேனை ஓட்டிய மாதிரி சந்தோஷம்தான். 

இதையும் படியுங்கள்:
வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!
Little joys like a bird flying with its wings.

கல்லூரி கடைசி வருடத்தில் மாணவ நிருபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கிடைத்த சந்தோஷம். விசிட்டிங் கார்டை  பார்த்து பார்த்து அடைந்த சந்தோஷம். பத்திரிகையில் என் படைப்பு வந்திருந்தால் அதைப் படித்து அடைந்த சந்தோஷம் அளவிடமுடியாது

இப்படி நிறைய நிறைய சின்ன சின்ன சந்தோஷங்கள் அனுபவித்த நாம் நம் பிள்ளைகளுக்கு தரவில்லையோ என்பது மட்டும்தான் வருத்தம். மற்றபடி சிறகடித்து பறக்கும் பறவை போல் அடைந்த சந்தோஷங்கள் நிறைய.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com