ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?
Published on

"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’’ என்கிறார் வள்ளுவர். பொய் சொல்வதால் ஒருவருக்கு நல்லது நடக்கும் என்றால் அந்த நேரத்தில் பொய் பேசுவது தவறு இல்லை என்பதை திருவள்ளுவரே கூறியுள்ளார்.

விடுதலை போராட்ட காலங்களில் போய் பேச வேண்டிய இடங்களில் பிரிட்டிஷாருக்கு பயந்து நிறைய பொய் தகவல்களை சொல்ல வேண்டிய நிர்பந்தம் கூட பலருக்கு ஏற்பட்டது உண்டு. அப்படி பொய் சொன்னதால் தப்பித்த தலைகள் ஏராளம். அப்படி அந்த இடத்தில் பொய் சொன்னதை யாரும் குற்றமாகப் பார்க்கவில்லை. அதற்கு காட்டிக் கொடுக்காதவர்கள் என்ற நற்பெயரும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன்  பற்றிய நாடகம், சினிமா போன்றவைகளும் அப்படிப்பட்டவைதான்.

இயேசு நாதரை காட்டிக் கொடுத்தவர்களும், எட்டையப்பன் போன்றவர்களும்  இழிசெயலுக்கு காரணமான எடுத்துக்காட்டாக கூறுவதை இன்றளவும் பார்க்கிறோம். 

சிலர் தொட்டதற்கெல்லாம் பொய் பேசுவார்கள். பள்ளிக்கு ஏன் வரவில்லை என்றால், அதற்கு ஒரு பொய். சிலர் பாட்டி தாத்தாக்கள் உயிரோடு இருக்கும்பொழுது அவர்கள் மறைந்து விட்டதாக கூறி விடுப்பு எடுப்பது உண்டு. இன்னும் சிலர் சினிமாவுக்கு போய்விட்டு வந்து வேறு எங்காவது போய் வந்ததாக பொய் பேசியதெல்லாம் அந்த காலத்தில் உண்டு.

இன்றும் சில வீடுகளில் யாராவது வந்துவிட்டால், அவர்களைப் பார்க்க பிடிக்கவில்லை என்றால் தன் குழந்தைகளிடமே கூறி அம்மா அப்பா இல்லை என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடு என்று கூறுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதனால் குழந்தையும் பொய் பேச கற்றுக்கொள்ளுமே என்று நினைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!
ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

பொய்யே பேசாதவர்களைப் பார்த்து அரிச்சந்திரன் வீட்டு அவதாரம் என்று பேசுபவர்களையும் காணலாம். சிலர் என்ன சங்கடம் வந்தாலும் அதை தாங்கிக்கொள்ள தயாராக உண்மையை மட்டுமே வலியுறுத்தி பேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி உண்மையை பேசுவதால் சில நேரங்களில் சில வீடுகளில் குழப்பம் ஏற்படுவதும் சாத்தியமே. இப்படி பொய் பேசுவதால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளும், உண்மை பேசுவதாலும் இது போன்ற சூழ்நிலைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

ஒரு ஞானி தன் சீடர்களிடம் அலுத்துக் கொண்டார். இந்த மனிதர்கள் எப்போது தனி மனிதர்களாக நடந்து கொள்வரோ தெரியவில்லை என்று…

சீடர்கள் கேட்டனர்ஒருவர் மனிதர் என்பதற்கு என்ன அடையாளம்? 

அதற்கு ஞானி எந்த ஒரு நாளிலாவது மனிதன் பொய் சொல்ல வேண்டிய தேவையில்லாமல் வாழ்வான் என்றால், அந்த நாள்தான் அவன் மனிதனான நாள்! என்றார். 

கால் வழுக்கினால் உடல் காயமுறும். நாக்கு தவறினால் வாழ்வே பாழாகும் -மெல்போர்ன் லீ

அடிக்கடி பொய் கூறுபவன் உண்மையை கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் -ஜான் க்ரோலி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com