தினசரிகளில் பலவிதமாக ஏமாற்றுபவர்களைப் பற்றி அறிய முடிகிறது. மக்களை ஏமாற்ற புதுப்புது வகைகளில் சிந்திக்கும் இவர்கள் ஆக்கப்பூர்வமாக ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதிர்ச்சி ஏற்படும். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமார்ந்து போகிறார்கள்.
பழங்கால பல்லவர் சிற்பம் பரம்பரை பரம்பரையாக தன் வீட்டில் இருப்பதாகச் சொல்லி ஒருவன் சிற்ப அங்காடிக்கு வந்தான். அருங்காட்சி மேலாளரிடம் ஐயா இதுஅற்புதமான சிற்பம். எனக்குநெருக்கடி. ஒரு லட்சம் வரை இது விலை போகும். எனக்கு பத்தாயிரம் கொடுத்தால் நான் ஒரு மாதத்தில் மீட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலாளர் அவன் கொண்டுவந்த பெண்ணின் நளினமான சிற்பத்தின் மயங்கி பணம் கொடுத்தார். ஒரு வாரம் கழித்து அருங்காட்சியகத்துக்கு. தொல்லியல் வல்லுனர் வந்திருந்தார்.
மேலாளர் சிற்பத்தை பெருமையாக காண்பித்தார். அதைப் பார்த்த வல்லுனர், இது பல்லவ காலச் சிற்பம் அல்ல. இரும்புத் துண்டு வைத்துச் செய்யப்பட்ட காகிதக் கூழ் சிற்பம் .ஆயிரம் ரூபாய் கூட பெறாது என்றார்.
மேலாளருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. அவருக்கு ஒரு திட்டம் உதித்தது. தன் நண்பர்களுக்கும் பத்திரிகையாளர் களுக்கும்அழைப்பு விடுத்தார். அதில் என்னிடம் பழங்கால சிற்பம் உள்ளது அதைக் காட அழைக்கிறேன் என்று எழுதியிருந்தார். அருங்காட்சியகம் முழுவதும் கூட்டம்.அந்தச் சிற்பத்தை பெருமையாக எடுத்துவரும்போது கம்பளம் தடுக்கி சிற்பம் சுக்குநூறாக உடைந்து விட்டது. எல்லோரும் வருத்தம் தெரிவித்துக் சென்றனர். மேலாளர் சோகமாக நின்றார்.
செய்தி இதழ்களில் பரவியது. அடுத்த நாளே சிற்பத்தை அடகு வைத்தவன் வந்தான். பத்தாயிரம் கொடுத்து தன் சிற்பம் வேண்டுமென்றான். உடனே மேலாளர் ஒரு சிற்பம் கொடுத்தார். அது அவன் அடகு வைத்ததுதான். அவன் பலமுறை உற்றுப் பார்த்தான் அவன் அடகு வைத்த சிற்பம்தான். ஏமாற்றத்துடன் எடுத்துச். சென்றான்.
உண்மையில் உடைந்தது அவன் சிற்பம் அல்ல. அதேபோன்று தயாரிக்கப்பட்ட போலி. மேலாளர் வேண்டுமென்றே போலி சிற்பத்தை உடைத்தார். உடைந்ததை கேள்விப்பட்டு அவரிடம் லட்ச ரூபாய் கறக்கலாம் என்ற திட்டத்துடன் சிற்பம் அடகு வைத்தவன் எண்ணினான். மேலாளர் புத்திசாலித்தனத்தால் அவருக்கு பத்தாயிரம் கிடைத்தது. அடகு வைத்த பேராசைக்காரன் ஏமார்ந்து போனான. குறுக்கு வழிகள் சில நேரத்தில் லாபத்தைத் தரலாம். உடனே அதை கெட்டியாக பிடித்துக் கொள்பவர்கள் உண்டு.
அது உயர்வதற்கான பாதை என எண்ணி புதை குழியில் சிக்கிக் கொள்வார்கள். தவறான பாதையில் பணம் ஈட்டுவது சுடப்படாத மண் பாத்திரத்தில் நீரைப் பாதுகாக்க நினைப்பது போன்றது என்றார். பணம்தான் உச்சபட்ச எல்லை என நினைப்பவர்கள் இருக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள். எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற நப்பாசையில் நிகழ் கால இனிமைகளைத் துறப்பார்கள். எதிர்காலத்தையும் கோட்டை விடுவார்கள். பொறுமை இருந்தால் வறுமை வாலாட்டாது. பொறுப்பு இருந்தால் நெருப்பு கூட தீபமாகி வழிகாட்டும்.