கவிதை - நையப்புடை!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on

யிர்களில் ஏற்றத்தாழ்வோடு

உதாசீனம் செய்வோரை

பணம் இருந்தும்

பகிராமல் சேர்ப்போரை

வறுமையில் உழல்வோர்க்கு

வழி காட்டாமல்

தன்னலத்தோடு

நாளும் தீங்குச் செய்வோரை

உழைப்போரை மிரட்டி

உவந்து வாழ்வோரை

எதிர்மறை எண்ணத்தோடு

என்றும் இருப்போரை

கையூட்டு வாங்கி

காரியம் ஆற்றுவோரை

சாதிமதம் என்னும்

சகதியில் மிதப்போரை

மூடநம்பிக்கையில்

நாளும் மூழ்கி இருப்போரை

கோள்களால் நலிவென்று

கோபித்து திரிவோரை

தெருவில் குப்பைகளைத்

தெரிந்து போடுவோரை

மரக்கன்று நடாமல்

மரத்தினை வெட்டுவோரை

நீரைச் சேமிக்காது

நீரைப் பாழ்படுத்துவோரை

வீட்டுப் பணியாளர்களை

வெறுப்பாய்க்காண்போரை

ஏழை உறவுகளை

ஏளனம் செய்வோரை

நையாண்டி செய்வோரை

நையப் புடைத்திடு!

logo
Kalki Online
kalkionline.com