motivation imageImage credit - pixabay.com
Motivation
கவிதை - ஞானத் திருட்டு!
உனக்குள்ளே ஆற்றல்
உவந்து கண்டறி.
ஐம்புலன் அடக்கு
ஐயத்தை அகற்றிடு.
அறவழி நடந்திடு
அன்பாய்ப் பேசிடு.
ஏழைக்கு உதவிடு
ஏற்றம் பெற்றிடு.
படிப்பால் வராது
பகுத்து அறிதல்.
கல்வியை நாம்
களவாடல் எப்படி.
உணர்வில் பொங்கி
உவகை தருவது.
அக இன்பம்
அகத்தில் ஒளிரும்.
புறத்தார் கண்கட்குப்
புலனாகாது என்றும்.
தன்னை அறிந்து
தனக்குள் தேடல்.
உணர்வால் அறியலாம்.
புணர்வு இன்றி.
யாரோ உணர்ந்ததை
யாங்கணும் அறிவாய்.
ஞானத்தைத் திருடல்
ஞாலத்தவர்க்கு அரிது.
பற்றற்று வாழ்ந்திட
பாங்காய்க் கிட்டும்.
பரிதவிப்போர்க்கு உதவிட
பரவும் ஞானம்
உள்ளத்தில் தங்க
உள்ளொளி படரும்.