இந்த சிறிய மாற்றம் உங்களை சிறப்பாக மாற்றும்! 

Small change will make you better!
Small change will make you better!

ந்தவிதமான தொழிலாக இருந்தாலும் அதைத் தொடங்கி ஒரு நிலைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான செயல்பாடாகும். அதில் நிறைய தவறு செய்வீர்கள், உங்கள் மீது உங்களுக்கே சந்தேகம் ஏற்படும், நிறைய தோல்விகளைக் கண்டு அதிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் மூலமாகவே அந்தத் தொழிலை வெற்றிகரமான ஒன்றாக மாற்ற முடியும்.

இது ஒரு தொழிலுக்குதான் என்றல்ல. நாம் முயற்சிக்கும் எதுவாக இருந்தாலும், தோல்வியடைந்து கீழே விழுந்ததும் எத்தனை முறை மீண்டு எடுக்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. என் வாழ்வில் நான் பார்த்த பலர், புதிதாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும், ஒரு புத்தகம் எழுத வேண்டும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்து காட்ட வேண்டும் என நினைத்து அதைத் தொடங்கவும் செய்துள்ளனர். ஆனால் ஒருவரால் கூட தொடங்கிய விஷயத்தை முடித்துக் காட்ட முடியவில்லை. ஏன் நானே கூட யூடியூபில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் இருந்தது. இன்று வரை அது ஆசையாக மட்டுமே இருக்கிறது. 

நாம் தொடங்கும் செயல்களில் சரியான முன்னேற்றத்தைக் காணாதபோது நாம் அதை விட்டுக்கொடுத்து விடுகிறோம். ஆனால், இதுவரை நான் முயற்சித்த பல விஷயங்களிலிருந்து கற்றுக் கொண்ட, வெற்றிக்கான தந்திரங்கள் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். 

  1. வெற்றிகளை குறித்துக் கொள்ளுங்கள்.

நாம் அனைவருமே பிறரிடம் ஒரு சில விஷயங்களை பகிரும்போது நாம் எதையெல்லாம் முயற்சித்து தோல்வியுற்றோம் என்பதை பற்றிதான் அதிகம் பகிர்ந்து கொள்வோம். நம்முடைய வெற்றிக் கதைகளை ஒருபோதும் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், நீங்களே நீங்கள் கண்ட வெற்றிகள் பற்றி குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வெற்றி மட்டும்தான் நமக்கு உத்வேகத்தை கொடுக்கும். நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றால், ஏதோ ஒன்றை சரியாக செய்திருக்கிறீர்கள் என அர்த்தம். அந்த விஷயத்தை மேலும் மெருகேற்றி மேம்படுத்த முயலுங்கள். தேவையில்லாமல் தோற்றுப்போன விஷயங்களைப் பற்றி சிந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

  1. அதிக வெற்றியை உருவாக்க பாடுபடுங்கள்.

தோல்வி நம்மை கலங்கடிக்கச் செய்தாலும், வெற்றியினால் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் வரையறுக்க முடியாது. தோல்வியைப் பற்றி அதிகம் சிந்திப்பதால் உங்கள் வாழ்க்கை எந்த வகையிலும் முன்னேறாது. வெற்றி பெற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் யோசியுங்கள். நீங்கள் வெற்றியடைந்ததைக் கொண்டாடி அந்த உந்துதலிலிருந்து அடுத்தடுத்த வெற்றியை உருவாக்க முயலுங்கள். நீங்கள் அதிகம் பணம் சம்பாதிப்பதில்லை என்பதை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக, ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பதற்கு ஏதோ ஒரு வேலை செய்து சம்பாதிக்கிறோம் என்ற வெற்றியை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் இறை சக்தி பெருக...!
Small change will make you better!
  1. வெற்றிக்கு உதவினால் வெற்றி பெறுவாய். 

தாவது ஒரு தொழிலாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அதில் எந்த அளவுக்கு நீங்கள் பிறருக்கு உதவுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் உங்களுக்கான விஷயங்களைக் கொடுப்பார்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் பிறருடைய வெற்றிக்கு உதவுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர், உங்களுடைய திறமை, செய்யும் வேலை, எந்த அளவுக்கு அவர்களின் வெற்றிக்கு உதவப் போகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டால், நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நிச்சயம் அவர்கள் செய்து கொடுப்பார்கள்.  

இந்த மூன்று விஷயங்கள் பற்றிய புரிதல், நீங்கள் உங்களை வெற்றியாளராக மாற்ற உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com