rasgulla...
rasgulla...Image credit - youtube.com

மாயமாய் மறைந்த ரசகுல்லாக்கள்!

Published on

வாழ்க்கை என்ற தினசரி பரிட்சையில், சிலபசில் இல்லாத கேள்விகள் தீடீர் என்று தோன்றி நம்மை திக்கு முக்காட வைக்கும். அப்படி தோன்றுபவைகளை எதிர்கொண்டு, சுயமாக பாராட்டிக் கொண்டு (self motivation) நகர்ந்து செல்ல வேண்டியது நமது கடமை.

அப்படி ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு காண்போம்.

கொல்கத்தா நகரத்தின் அன்றைய டம் டம் விமான நிலையம்.

ஒரு பயணி விமான நிலையத்தில் நுழைந்தார். அங்கு எதிர்பாராத வண்ணமாக அவருடைய தமிழ் நண்பரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து மகிழ்ந்தார். அவர்களுக்கு வங்காள மொழி சரளமாக தெரியும். அதனால் உரையாடல் அந்த மொழியிலேயே தொடர்ந்தது.

நேரம் அதிகம் இருந்ததால் பல டாபிக்குகள் பற்றி பேசி மகிழ்ந்தனர். அவர் நகைச்சுவை கலந்து பேசியதால் நேரம் நகர்ந்ததே தெரியவில்லை. கலகலப்பாக இருந்தது.

உள்ளே செல்லும் நேரம் வந்தது. எல்லோரும் செல்ல தயார் ஆனார்கள். இந்த நபர் கையில் ஒரு ரசகுல்லா டின் மற்றும் ஒரு கைப் பையுடன் முதலில் சென்றார்.

அன்றைய காலகட்டத்தில் ரசகுல்லா டின் கையில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவர் நயமாக கூறினார். சிறிது உரத்த குரலில் விவாதித்தார். இவர் ஜம்பம் எடுபடவில்லை.

அந்த ரசகுல்லா டின்னை அங்கு இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போனால் , அவருக்கு உள்ளே செல்ல அனுமதி என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டனர்.

வேறு வழியில்லை. சிறிது யோசனை செய்தார்.

அவர் தமிழ் நண்பர் குடும்ப உறுப்பினர்களிடம் (அவர்கள் மொத்தம் நான்கு நபர்கள் ) சிறிது வெயிட் செய்ய கேட்டுக் கொண்டார்.

கையில் இருந்த ரசகுல்லா டின்னை ஓப்பன் செய்தார். உள்ளே மிதந்துக் கொண்டிருந்த சுவைமிக்க ரசகுல்லாக்களை அவர்கள் எல்லோருக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

அந்த காலி டின்னை அந்த டஸ்ட்பின்னில் எறிந்துவிட்டு உள்ளே சென்றார், கெத்தாக.

உள்ளே சென்றதும் கூறினார், "எதிர்பாராத தாக்குதல்கள் சிறியதோ, பெரியதோ அவற்றை எதிர்கொண்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தகர்த்து எறிந்து முன்னேறி செல்வதில்தான் திரில் கிடைக்கும். அந்த சமயத்தில் தடையாக தோன்றினாலும், பதட்டப்படாமல் யோசித்தால் விடிவெள்ளி (sparkling light) புலப்படும். கட்டாயம் முடிவு கிட்டும் என்ற நம்பிக்கையோடு முன்னேறினால் சாதகமாக அமைய வழி கிடைக்கும். இங்கு வெற்றி, தோல்விக்கு முக்கியம் இல்லை. பிரச்சனைக்கு விடை காண்பதே அவசியம் மற்றும் முக்கியம். அனாவசியமக டென்ஷன் கொண்டால் குழப்பம்தான் மிஞ்சும் பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது (self appreciation) உங்களை மேலும் உற்சாகப்படுத்தும்!" என்று பாசிடிவ்வாக கூறி சிரித்தார்.

உடன் இருந்த நண்பரின் குடும்ப நபர்களும் அவர் கூறியதை ஆமோதித்து சிரித்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு கம்பெனி கொடுத்தது அவர் கொடுத்த தனி
டேஸ்ட் கொண்ட தித்திக்கும் ரசகுல்லாக்கள்.

logo
Kalki Online
kalkionline.com