
மற்றவர்கள் பேசுவதை நீங்க ஆர்வத்துடன் கவனிக்கிறீர்கள் என்பதை உணர்த்த இயல்பாக அவர் முன் சாய்ந்தபடி கேட்பது அல்லது மென்மையாக புன்னகைப்பது , தலையசைத்து போன்ற உடல் பாவங்களைச் செய்யலாம்.
ஒரு நபர் கோபத்துடன் இருக்கிறாரா, மனம் காயப்பட்டு இருக்கிறாரா அல்லது உற்சாகத்துடன் இருக்கிறாரா என்பதைப் புரிந்துகொள்ள அவர் உடல், குரல், பாவங்களை கூர்ந்து கவனிக்வும். அவர் என்ன உணர்வுடன் இருக்கிறார் என்பது அவசியம்.
அவர் பேசுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேணடும். அவர் எண்ணத்தை நீங்கள் புரிந்துகொண்டதை புரிந்து கொண்ட விதத்தில் சொல்வதன் மூலம் அவருடைய நம்பிக்கையைப் பெறமுடியும்.
நீங்கள் மற்றவர்கள் பேசியதை சரியென்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் விஷயத்தில் முரண்பாடு இருந்தால் மனந்திறந்து கேள்விகளை எழுப்புங்கள்.
அவர் தகவலை சொல்லி முடித்ததும் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்லுங்கள். அவர் சொன்ன விஷயத்தை நீங்கள் சரியாக புரிந்துகொண்டீர்கள் என்பதை இது தெளிவுபடுத்தும்.
மற்றவர் பேச முனையும்போது இப்போது நேரமில்லை, பிறகு பார்க்கலாம் என்று தட்டிக்கழிக்காமல் அடுத்தவர் பேசுவதைப் கேட்க நேரம் ஒதுக்குங்கள்.
மற்றவர் பேசுவதை புரிந்து கொண்டோமா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் சொல்வதைத்கேட்டு தலையை ஆட்டிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.
ஒருவர் சொன்ன விஷயம் உங்களை உத்சாகப்படுத்தியது என்றால் உங்கள் மகிழ்ச்சியை முழுவதும் வெளிப்படுத்துங்கள். அதை அடக்கி வைக்காதீர்கள்.
பேசுபவரின் உருவத்தை வைத்து சில முடிவுக்கு வருவது அவரைப்பற்றி ஏற்கெனவே ஒரு கற்பித்தலை ஏற்படுத்திக்கொண்டு கேள்விகள் கேட்பதை தவிர்க்கவேண்டும்.
சில விஷயங்களில் முரண்பாடு இருக்குமானால் வெளிப்படையாக சொல்லிவிடுவது நல்லது. அதனால் மற்றவர் தன் நிலையை மேலும் தெளிவுபடுத்த முயற்சிக்கலாம். அல்லது தன் நிலையை மாற்றிக்கொள்வது பற்றி யோசிக்கலாம்.
நீங்கள் உங்கள் அபிப்ராயத்தை முன் வைக்கும்போது அது அந்த விழயத்திற்கு தீர்ப்பு கூறுவதாக அமைந்து விடக்கூடாது.