மனநிலையை மாற்றி வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

To make life spring
motivation articles
Published on

ல்லா மனிதர்களுக்கும் பல திறமைகளை இயற்கை அளித்திருக்கிறது. அந்த மனிதன் இருக்கும் சூழலுக்கேற்பவும் அவரது மன நிலைக்கேற்பவும் அவரது ஆற்றல் வெளிப்படுகிறது. இப்படி வெளிப்படும் ஆற்றல், அவரை மற்றொரு உச்சத்தில் கொண்டு சென்று வைக்கும். 

மலர்கள் நிறைந்த பூங்கா ஒன்றுக்குள் செல்லும் மனிதன், அந்த மலர்களின் அழகை ரசித்து, ரசித்துத் தானும் ஒரு மலராக மாறிப் போவதில்லையா? உயிரியல் பூங்காக்களுக்குள் நுழையும் மனிதன், அங்கு வருகை தந்திருக்கும் குழந்தைகளின் உற்சாகத்தைக் காணும்போது தானும் குழந்தையாகிப் போவதில்லையா?

ஒவ்வொரு மனிதனும் தன்னையே ஒரு சிறிய சிறைக்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல், உற்சாகமான மனோபாவத்துடன் தன்னை வெளிப்படுத்தினால் எவ்வளவோ சாதனைகளைச் செய்யமுடியும்.

ஒருவருடைய வெற்றி, தோல்வி என்பதை முழுக்க முழுக்க அவருடைய பதவியைப் பொறுத்துத் தீர்மானிப்பது மாபெரும் தவறு. இந்தத் தவறான போக்கு, இளைஞர்களிடம் பெரிய பதவியை அடைந்தால் மட்டும்தான் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்ற மனோ பாவத்தை வளர்க்கிறது. இதனால் சற்று பின்தங்கியவர்கள் தோல்வி மனப்பான்மையோடு தாழ்வு மனப்பான்மையையும் கொண்டு விடுகிறார்கள்

இதனால் வாழ்நாள் முழுவதும் தாங்கள் அடைய முடியாமல் போன இலக்குகனை நினைத்து வருத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறிய வயதிலிருந்தே நினைத்ததை அடைத்தால்தான் வெற்றி என்ற மன பாவத்திலேயே வளர்கிறோம்.

இந்த வேண்டாத மனோபாவுத்தைப் பெற்றோரும் வளர்ப்பதுதான் பெரிய சோகம். தாங்கள் அடைய முடியாததைத் தங்கள் பின்ளைகள் அடைந்து விடவேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்தும் கொள்கிறார்கள். இதனால் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டு பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற் றோர்களால் குறிப்பிட்ட சிலவற்றைத்தான் தங்கள் பிள்ளைகளுக்காக பெற்றுக் கொடுக்க முடியும். பிள்ளைகளே தங்கள் முயற்சியால் சிலவற்றை அடைந்தால்தான் அவர்களால் எதிர்கால வாழ்வை சிறப் பாக அமைத்துக் கொள்ள முடியும் என்ற மனப்பான்மையை ஊட்டி வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

நினைத்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்த ஒன்றை வைத்துக் கொண்டு அதில் எப்படி முன்னேற்றம் காண்பது என்று முயற்சி செய்து வெற்றி காண்பதுதான் நல்ல மனோபாவம். இத்தகைய மனோபாவம் இல்லாத இளைஞர்கள், சிறிய வயதிலேயே விரக்தி நிலைக்கு ஆளாகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எப்படித்தான் இந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிப்பது…?
To make life spring

கிடைத்தற்கரிய இந்த வாழ்க்கையைத் தூக்கிக் கொண்டாட வேண்டிய காலத்தில் துன்பக்கடலில் மிதக்கிறார்கள்.

நாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களோடு வாழ்வை அடையாளப்படுத்தி நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

உதாரணமாக, உங்கள் நண்பர் நல்ல வேலையில் இருந்தால் நாம் நல்ல வேலையில் இல்லையே என்று வருத்தப்படுகிறோம். நம் நண்பரின் திருமண வாழ்வு முறிந்துவிட்டது என்றால் நமது திருமண வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கிறது என்று நினைத்து நிறைவடைந்து கொள்கிறோம்.

நமது நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்க்கும் சினிமா, படிக்கும் நாவல் ஆகியவற்றோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

உண்மையில் பிறரின் வாழ்க்கை இன்பங்களோ துன்பங்களோ நம்மை ஒன்றும் பாதிப்பதில்லை. இதை உணர்ந்த மனிதர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பாடமல், எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கி றார்கள்.

சின்னத் தெளிவு மட்டும் இருந்தால்போதும், இந்த மனநிலையை மாற்றி, வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ள அனைவராலும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com