தெளிவான திட்டமிடல்: டென்ஷன் இல்லாத வெற்றிக்கான வழிமுறை!

Clear planning
Motivational articles
Published on

தாங்கள் மேற்கொள்கும் முயற்சியில் வெற்றி வாகை சூடவேண்டும் என்பது பலரின் கனவு. அது சரியே. அதை எப்படி அடைவது என்பதுதான் சவால். அது குறித்து சில யோசனைகளை காண்போம்.

வெகு சிலரால் முடிந்தால் பலராலும் முடியும். முடியும் என்ற எண்ணத்தோடு சிந்தித்து செயல்பட்டவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்கு வழி காட்டி வழி நடத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.

சிலர் தெளிவான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதிப்பார்கள். இத்தகையவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணி அல்லது முயற்சியில் சிறிதும் குழப்பம் அடைய மாட்டார்கள். மேலும் பிறரையும் குழப்பம் அடைய விடமாட்டார்கள்.

தெளிவாக சிந்திப்பார்கள். தேவையானவற்றை நேர்த்தியாக சேகரிப்பார்கள். தேவைக்கு ஏற்ப விவரங்களை பட்டியலிட்டு ரீகார்டுகள் செய்து வைத்துக் கொள்வார்கள். நடவடிக்கை எடுக்கும் பொழுதும், சந்தேகங்கள் எழுந்தாலோ இத்தகையை குறிப்புக்களை பார்த்து தெளிவு செய்து கொண்டு அடுத்துக் கட்டங்களுக்கு இலகுவாக நகர்ந்து செல்வதற்கு உரிய ஆதரவை (support system) கைவசம் வைத்து இருப்பதில் குறியாக இருப்பதுடனும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் செயல்பாட்டிலும் காட்டி எந்த தருணத்திலும் கை கொடுக்கும் விதமாக ரெடியாக இருப்பார்கள்.

எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பணி சம்பந்தமான நடை முறை சிக்கல்களை அனுபவத்தின் மூலமாக ஒருவாறு கிரகித்து / கணித்து அவற்றை முறியடிக்கவும், கடந்து செல்லவும் முன் கூட்டியே தயார் நிலையில் இருப்பார்கள்ம்

இத்தகையை தெளிவான சிந்தனை மற்றும் நடவடிக்கைகள் நேரம் விரையம் ஆவதில் இருந்து காப்பாற்றும். அதுமட்டும் அல்லாமல் அனாவசிய கூடுதல் செலவுகளை தவிர்க்கவும் பெரிதும் உதவும்.

இதையும் படியுங்கள்:
அன்பு விதைப்போம்... வெற்றி அறுப்போம்!
Clear planning

இவைகளுடன் மிக முக்கியமாக தேவையில்லாத கவலை சுமையிலிருந்து காப்பாற்றி டென்ஷன் இல்லாமல் பயணிக்க உதவும். (tension free)

தெளிவாக சிந்திக்க பழகியவர்களுக்கு எவை, எவ்வளவு, எப்படி, எவ்வாறு தேவை என்பதை பற்றியும், எங்கிருந்து பெறவேண்டும், அதற்கு உரிய தொகை பற்றிய விவரங்களை துல்லியமாக கணிக்க மற்றும் சேகரித்துக் கொள்ளவும் தெரியும், முடியும்.

தெளிவான நடவடிக்கைகள், அனுபவ பாடம் (குறிப்பிட்ட தனி நபர் உடன் பிறரின் அனுபவ பாடங்கள் மூலம் அறிந்தும் கொள்ளலாம்) தெளிவாக முடிவுகள் எடுக்கவும், பின் பற்றவும் கை கெட்டும் தூரத்தில் இருந்து செயல்பட வைக்கும். ( within vicinity)

தெளிவான நடவடிக்கைகளை எப்பொழுதும் பின் பற்றுபவர்களுடன் கட்டாயம் தன்னம்பிக்கை, சாதிக்க முடியும் என்ற உந்துதல் சக்தி எப்பொழுதும் உடன் பயணிக்கும் அவர்கள் மேற்கொள்ளும் வெற்றி பாதையில் முன்னேறி செல்ல.

இத்தகைய தெளிவான சிந்தனை, நடவடிக்கைகள் கொண்டவர்களால் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளையும், இடையூறுகளையும் எதிர்கொண்டு கடந்து செல்ல முடியும். அவர்களுக்கு நன்கு தெரியும் போகும் பாதையில் தடங்கல்கள், எதிர்பாரா சங்கடங்களை கடக்காமல் தவிர்க்க முடியாது என்பது.

எனவே தெளிவான நடவடிக்கைகளில் முன் கூட்டியே அதற்கும் உரிய திட்டங்களோடும், துணை உபகரணங்கள், துணைப் பொருட்கள் உடன்தான் களம் இறங்குவார்கள். (support equipments, aids)

ஆக மொத்தம் தெளிவாக சிந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற் கொள்பவர்களால் வெற்றி கதவை தட்டி முன்னேறி சாதிப்பது முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com