இதுவும் கடந்துபோக 8 யோசனைகள்!

Motivational articles
Suggetions for human life
Published on

னிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கடினமான காலம் என்பது வந்து சேரலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அதனை எப்படி கடந்து செல்வது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும். அதற்கான சில வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம். இங்கு பார்க்கலாம்.

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது:

நாம் அனைவரும் கடினமான காலத்தை கடந்து செல்லும்போது, கண்டிப்பாக மனதிற்கு பாரமான உணர்வுகள் ஏற்படும். இவற்றை மதித்து, நமக்கு இருக்கும் உணர்வு கோபம், சோகம், எரிச்சல் என இதுவாக இருந்தாலும் அவற்றை உணரவேண்டும். இதை யாரிடமும் கூற முடியவில்லை என்றால் டைரியில் எழுதலாம்.

நெகட்டிவாக பேசவேண்டாம்:

உங்களுடைய நண்பர் கடினமான காலத்தில் இருக்கும்போது எப்படி அவரிடம் ஆறுதல் கூறுவீர்களா, அதேபோல உங்களுக்குள்ளும் நீங்கள் பேசிக்கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் பழித்து கொள்ளாமல், திட்டாமல் பாசிட்டிவாக பேசுவது மிகவும் முக்கியம்.

கவனம் செலுத்துதல்:

அழுத்தம் நிறைந்த காலத்தில் இருக்கும்போது, யோசனைக்கு வஞ்சனையே இருக்காது. 10 வருடங்களுக்கு முன்னால் நடந்ததிலிருந்து 10 வருடங்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் விஷயம் குறித்தும் அதிகமாக யோசிப்போம்.

இதனால் நிகழ்காலத்தில் பல சமயங்களில் இல்லாமல் போய்விடுவோம். எனவே, நிகழ்காலத்தில் இருக்க உங்களை நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும். அந்த நாளில் உங்களுக்கு சின்ன சின்ன வெற்றிகள் கிடைத்தாலும் அதனை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

ஆதரவு:

நமக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினராக இருப்பர். அப்படி உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை உங்களால் கையாள முடியவில்லை என்றால் அவர்களிடம் அதே தெரிவிக்க வேண்டும்.

கட்டுப்படுத்துவதில் கவனம்:

வாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கையை மீறி நடக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே உங்கள் கையில் என்ன இருக்கிறதோ, உங்களால் எதை கட்டுப்படுத்த முடிகிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மன உறுதி:

உடல் அளவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது விஷயம் இல்லை. நமக்கு மனஉறுதி இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். இதை வளர்க்க நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில மாறுதல்களை ஏற்படுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வது, பிடித்த வேலைகளை செய்வது, மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விஷயங்களை செய்வது போன்றவற்றை செய்தாலே உங்கள் வாழ்க்கை மேம்படும்.

உடல் நலன்:

கடினமான காலத்தை எதிர்கொள்ளும்போது எதையும் சாப்பிட வேண்டும், நேரத்திற்கு தூங்கவேண்டும் என்று தோன்றாது. ஒரு சிலர், அதிகமாக சாப்பிட்டு பின்னர் அவஸ்தை படுவர். அதையெல்லம் செய்யாமல், ஓய்வு தேவைபடும் நேரத்தில் ஓய்வெடுத்து, உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். மன நல ஆலோசனை தேவைப்படுகிறது என்றால், அதற்காக ஒரு நல்ல மருத்துவரை அணுகுவதிலும் தவறில்லை.

இதுவும் கடந்து போகும்…

இதற்கு முன்னர், வாழ்வில் எவ்வளவோ கடினமான தருணங்களை கடந்து வந்திருப்பீர்கள். ஆனால் சில நாட்கள் கழித்து அவையும் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போயிருக்கும். எனவே, இப்பாேது இருக்கும் இந்த தருணமும் காற்றில் காணாமல் போகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com