
உறுதியாக இருத்தல்
ஒரு செயலை செய்ய நினைத்தால், அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருப்பவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்!
சிந்தித்து செயல்படுங்கள்
எதைச் செய்வது? எப்படி செய்வது? அதன் விளைவுகள் என்ன? என்று நன்றாக சிந்தித்த பிறகு ஒரு செயலில் இறங்கவேண்டும்.இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ? அந்தப் பேருந்தில்தான் ஏறவேண்டும். ஏதோ ஒரு பேருந்தில் ஏறி அது போகும் ஊரில் போய் இறங்குவதற்கு பெயர் பயணம் அல்ல!
தாமதம் கூடாது
எதை எப்போது எப்படி செய்ய வேண்டும்? என்ற தெளிவு வேண்டும். சில செயல்கைளை நிதானமாகச் செய்யலாம் என்றால் அவற்றைச் செய்ய காலம் தாழ்த்துவதில் தவறில்லை. ஆனால் விரைவாக செய்யவேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது. ஒரு நிமிடத்தின் அருமை அந்த ஒரு நிமிட தாமதத்தால் நீண்ட பயணத்துக்கான ரிலை தவறவிட்டவர்களுக்கு புரியும்.
முறையாகச் செய்யுங்கள்
செய்யும் ஒரு செயலில் பெரும் ஆதாயம் கிடைக்கும் என்று கூட இருக்கட்டும். அதற்காக கையில் இருக்கும் எல்லாப் பணத்தையும் அதில் முதலீடு செய்வது சரியல்ல. ஒருவேளை ஏதேனும் முதலீடு மொத்தமும் காணாமல் போய்விடும்.
அப்படிப்பட்ட காரியத்தை முறையாக செய்யவேண்டும் அதன்படி முறையாக முயற்சி செய்யவேண்டும். இல்லாவிட்டால் எத்தனை பேர் துணையாக இருந்தாலும் இந்த முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
மனதில் உறுதி வேண்டும்
எல்லாம் இருந்தாலும் எத்தனை பேர் உதவி செய்தாலும் சிலர் மட்டும் தங்கள் முயற்சிகளில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். மனதில் உறுதி இல்லாததுதான். எந்த செயலும் சிறக்காது. ஆனால் மனதில் உறுதிவேண்டும்.
'நம்மால் முடியும்' என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த தன்னம்பிக்கை அதிகமாகி நம் பார்வையை மறைத்து விடக்கூடாது. தன்னைப் பற்றி அதிகமாக கணக்கு போட்டுக்கொண்டு எல்லை மீறி போகிற ஒருவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ? அந்த கதிக்கு ஆளாவார் என்கிறார் திருவள்ளுவர்.
ஆற்றல் படையுங்கள்
முயற்சி செய்கிற ஒருவரின் குணங்களே அவரை ஜெயிக்க வைக்கின்றன. தான் நினைக்கும் எதையும் சொல்லி எவரையும் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவராகவும், சோர்வு இல்லாதவனாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் இருப்பவர்களை யாராலும் வெல்ல முடியாது!
நம்பிக்கை கொள்ளுங்கள்
அரைக்கிணறு தாண்டியவர்கள் பற்றி ஆயிரம் கதைகள் இங்கு உண்டு. அவர்கள் கால்கள் தாண்ட நினைக்கும் தூரத்தை முதலில் மனம் தாண்டவேண்டும். மனதால் தாண்ட முடியாதவர்கள் தடுமாறி விழுந்து விடுகிறார்கள். முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு எவரையும் சிகரத்தில் ஏற்றும் வலிமை உண்டு.
வெற்றியை நோக்கிய பயணமும் இப்படிப்பட்டதுதான். செயலை செய்ய நினைத்தால் அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதை செய்து முடித்தால் எளிதில் வெற்றி பெறலாம்! இதனால் கிடைக்கும் வாசலில் காத்திருக்கும் நமக்கு வெற்றி!
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்!