நாணயம் மற்றும் நாநயம்: வெற்றிகரமான வாழ்வின் சூத்திரம்!

Lifestyle articles
Motivational articles
Published on

மது வாழ்க்கையில் நாம் பலவித நல்ல குணங்களை கடைபிடித்தாலும் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தீயகுணங்களும் அவ்வப்போது எட்டிப்பாா்க்கத்தான் செய்கின்றன. அதனால் சில நேரங்களில், நாம் பலவித இழப்புகளை சந்திக்க நோிடுகிறது. அந்த களையை நாம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டால் வாழ்க்கை எனும் நிலத்தில் நல்லலவன் என்ற பெயராகிய பயிா் வளா்ந்து, அமைதி எனும் மகசூலை வாாி வழங்கிவிடுமே!

பல தீய குணங்களுக்கு நாம் ஆட்பட்டாலும் அதனில் சிலவற்றை நாம் ரத்தினக்கம்பளம் கொண்டு வரவேற்பது தவறான விஷயமாகும்.

நான் என்ற அகம்பாவம் தவிா்த்தல்

நம்மிடம் நான் என்ற அகம்பாவம் இருக்கவே கூடாது. நமக்குத்தான் எல்லாம் தொியும், நான் சொன்னால் சரியாக இருக்கும், நான் சொல்வதுதான் சரி,என்ற எண்ணம் நம்மிடம் வரவே கூடாது. அதனால் நாம் சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில், பல்வேறு இடங்களில், உதாரணமாக உறவு, மற்றும் நட்பு வட்டத்தில் பலவித இழப்புகளைசந்திக்க வேண்டிய சூழல் உருவாகிவிடுமே! ஆக நான் எனும் தேவையில்லாத கிளையை வெட்டி எறியுங்கள். அது வளர்வதும், அதை வளரவிடுவதும் நமது வளா்ச்சிக்கான முட்டுக்கட்டையே.

நாணயம் மற்றும் நாநயம் தவறும் நிலை

பொதுவாக மனிதன் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான கொள்கை நாணயம் மட்டுமல்ல, நா நயமும்தான். அவசர தேவைக்கு ஒரு நபரிடம் கடன் வாங்கிவிடுகிறோம். அதை திருப்பிக்கொடுக்க கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் நிலையில், நா நயத்தோடு பேசி பிரச்னையை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

சில சந்தர்ப்ப சூழலில் நம்மையும் அறியாமல் சும்மாவா கொடுத்தீா்கள் நான் இத்தனை மாதம் வட்டி கொடுத்துள்ளேன் என, நா நயம் தவறிப்பேசுவதால் அந்த இடத்தில் நமது நாணயம் கெட்டுப்போய்விடுமே! வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக்கொடுக்க முயற்சி செய்வதே நமக்கான மரியாதையை கொடுக்கும் என்பதை உணரவேண்டும். அதுதான் நாணயத்திற்கான முத்திரையாகும்.

இதையும் படியுங்கள்:
"மூட் அவுட்" இனி நோ - 120 நொடிகளில் உங்கள் மனதை மாற்றும் மந்திரம்!
Lifestyle articles

செருக்கு உள்ளவன் வாழ்க்கையில் சறுக்கிவிழ நோிடும்

சில நபர்கள் செருப்பு, மற்றும் உடை அணிவதுபோல செருக்கையும் கூடவே அணிந்து கொள்கிறாா்கள். அதற்கு கூடா நட்பும் ஒரு காரணமாகிவிடும். நாம்தான் வீர பராக்கிரமசாலி தன்னைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த மரியாதை வரவேண்டும் என பில்டப், மற்றும் ஹம்பக், வேலைகளை ஒருபோதும் கடைபிடிக்காதீா்கள். எந்த ஒரு விஷயத்தையும் அன்பால் சாதித்துவிடலாம், அன்பால் சாதிக்க இயலாததை வம்பால் சாதிக்கவே முடியாது.

எனவே செருக்கு எனும் கோரைப்புல்லை உரம் போட்டு வளா்க்காதீா்கள், அது வளா்வதால் நமக்கு பாதகம் ஏற்படுமே தவிர சாதகமே கிடைக்காது. நாம் நமது வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை கடைபிடித்து மனிதநேயம் காத்து மனசாட்சிக்கு பயந்து அடுத்தவர்கள் கெட்டுப்போகவேண்டும் என்ற எதிா்மறை சிந்தனை தவிா்த்து இறை உணர்வோடு அகம்பாவம் செருக்கு, மமதை போன்ற தீயகுணங்களை தவிர்த்து வந்தாலே நமது வாழ்வில் முன்னேற்றமும், வளமும் நல்ல சொந்த பந்தங்களும் தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com